SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாங்கவாவது முடியும்

2020-01-26@ 00:07:38

நாட்டின் பொருளாதார மந்தநிலை, நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் அதிர்ச்சி தகவல்களையே தருகிறது. தொழில் துறையில் உற்பத்தி குறைப்பு, வேலை இழப்பு, விற்பனை சரிவு என்ற தகவல்கள் வெளியாகி கவலைக்குள்ளாக்கின.  இந்நிலையில், பட்ஜெட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும் நேரடி வரிகள் வருவாய் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நிதியாண்டில் முதல் முறையாக குறைந்துள்ளது என்ற புள்ளிவிவரம் அரசை நிலைகுலைய வைத்துள்ளது.  கடந்த நிதியாண்டில் நேரடி வரிகள் வருவாய் 11.5 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் அது குறைந்து இதுவரை சுமார் ₹7.5 லட்சம் கோடிதான் வசூலாகியுள்ளது.

இதற்கு இரண்டு விஷயங்கள் பிரதானமாகக் கூறப்படுகிறது. ஒன்று பொருளாதார மந்தநிலை. அதனால் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம், வேலையிழப்பு, முதலீடு குறைப்பு, நிதி நெருக்கடியால் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வராக்கடன் சுமையால் வங்கிகள் கடன் கொடுப்பதில் சுணக்கம், வேலையில்லா திண்டாட்டம் என்று காரணங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.  இதுதவிர, புதிதாக தொழில் தொடங்க முதலீடு செய்யவும், தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் பெரிய நிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பினால்தான் வரி வருவாய் குறைந்தது என்று  வரிகள் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் சூழல் தற்போதே தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த நிதி பற்றாக்குறையை சமாளிக்கவே பட்ஜெட்டிற்கு முன்பு அரசு சார்பு நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ.1.96 லட்சம் கோடி கடன் வாங்க அரசு  தயாராகி அதற்கான முயற்சியில் இறங்கிவிட்டது. அப்போதுதான், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை அரசால் எடுக்க முடியும்.பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையில் கிராமப்புறங்களில் நலத் திட்டங்கள், அடிப்படை கட்டமைப்புகள் மேம்பாடு ஆகியவற்றிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதனால் வேலைவாய்ப்பை பெருக்குவதோடு,  பணப்புழகத்தை அதிகரித்து மக்களின் வாங்கும் சக்தியை வலுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார மந்தநிலையில் இருந்து நாட்டை காக்கவும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் அரசு சிந்தித்து, நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதித்து எதிர்க்கட்சிகளின் கருத்துகளை உன்னிப்பாக கவனித்து செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் தடைகளை தாண்டி மந்தநிலையில் இருந்து ஒரே நாளில் மீள முடியாவிட்டாலும், அதை தாங்கிக் கொண்டு எழும் நடவடிக்கைகளையாவது எடுக்க முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்