SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளறுபடி

2020-01-25@ 00:05:40

அரசு தொடக்க நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போன்ற பொதுத்தேர்வால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துதெரிவித்தனர். 5,8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத தமிழக அரசு 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் என்று அறிவித்தது. இதையடுத்து அரசு தரப்பில் இருந்து மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்களாக அருகாமையில் இருக்கும் பள்ளிகளை தேர்வு செய்து அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

5,8ம் வகுப்பு மாணவர்களில் பலர் தங்கள் பள்ளிக்கு சென்று வருவதை மட்டுமே வழக்கமாக கொண்டவர்கள். அருகாமையில் உள்ள பள்ளி மற்றும் அதன் முகவரி அறியாதவர்கள். இப்படி இருக்கும் போது அவர்கள் தனியாக தங்கள் தேர்வு மையங்களை தேடி அலைந்து எப்படி செல்வார்கள். இதனால் மேலும் மன உளைச்சல் ஏற்படும் என்று பெற்றோர் தரப்பில் தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பை தொடர்ந்து அந்தந்த பள்ளிகளிலேயே 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அமைத்துகொள்ளலாம் என்று தொடக்க கல்வித்துறை அறிவித்தது. இந்த குளறுபடி முடிவதற்குள் மீண்டும் ஒரு குளறுபடியை தமிழக அரசு செய்தது. அதாவது, அரசு பள்ளிகள், ஊராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றுக்கு தேர்வு கட்டண விலக்கு அளித்துள்ளது. அதே போன்று கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டின் கீழ் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

அதே சமயம், அனைத்துவித தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 5ம் வகுப்பு தேர்வு எழுத ரூ.100, 8ம் வகுப்பு தேர்வு எழுத ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் கூடுதல் சுமையாகியுள்ளது. கட்டணம் குறித்து விவரங்களை முன்கூட்டியே அறிவித்து பணத்தை ஆண்டு தொடக்கத்திலேயே வசூலித்துவிட்டால் தேர்வு நேரத்தில் சிரமம் குறைவாக இருக்கும் என்பது அனைத்து தரப்பினரின் ஆலோசனையாக உள்ளது. திட்டமிடுதலில் உள்ள குளறுபடிகளை சரி செய்து கொண்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையற்ற மனஉளைச்சல் தருவதை ஆரம்ப கல்வித்துறை தவிர்க்க வேண்டும் என்பதே கல்வி ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்