SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்களை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து ரூபாய் வரிசை எண் கூறி அசத்தும் மாணவி

2020-01-24@ 20:30:38

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன், நெசவு ெதாழிலாளி. இவரது மகள் சுருதி (11). அதே கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் கண்களை துணியால் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், எண்கள், நிறங்களை தெரிவித்தல் என தனித்திறமை பெற்றுள்ளார்.திருவண்ணாமலையில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலையில் தன்னுடைய சாதனை முயற்சியை வெளிப்படுத்தினார். மாணவி சுருதி தனது கண்களை துணியால் கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து  திருவண்ணாமலை-வேலூர் சாலையில் எவ்வித தடுமாற்றமும் இன்றி சைக்கிளை சுமார் 1 கி.மீ. தூரம் ஓட்டினார். அவருடன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

மேலும், கண்களை கட்டியபடி ஓவியங்களை வரைந்து வண்ணம் தீட்டினார். வண்ணங்கள், எண்கள், எழுத்துக்கள், ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, அதில் இடம் பெற்றுள்ள வரிசை எண்கள் ஆகியவற்றையும் கூறினார். இந்த சாதனை  நிகழ்ச்சிகளில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து, மாணவி சுருதி கூறுகையில், `கடந்த ஓராண்டாக யோகா பயிற்சி பெற்று வருகிறேன். துணியால் கண்களை கட்டிக்கொண்டு, அதிகபட்சம் 60 கி.மீ. தூரம் வரை சைக்கிள் ஓட்டி சாதனை செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அதற்காக,  இதுவரை 18 கி.மீ. வரை சைக்கிளில் சென்று பயிற்சி எடுத்திருக்கிறேன்’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்