SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களுக்கு தேவையற்றதையே மோடி அரசாங்கம் செய்கிறது: கே.எஸ்.அழகிரி கருத்து

2020-01-24@ 15:26:47

சென்னை:  அனைத்து கட்சி கூட்டத்தில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச்சட்டம்  இவைகளுக்கெல்லாம் எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மக்களை பிரிக்கக்கூடிய பாரதிய ஜனதாவின் இந்த திட்டங்கள் இதுவரை அரசியல் கட்சிகளால் மட்டும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக வருகிற 2ம் தேதியிலிருந்து 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். இதனை தொடர்ந்து கோடிக்கணக்கான மக்களிடம் சென்று கையெழுத்து இயக்கம் பெற வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

இந்த சட்டத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், இவை சிறுபான்மையினருக்கு மட்டும் எதிரான சட்டம் அல்ல,  இந்தியாவில் அறியாமையில் இருக்கிறன்றவர்கள், படிப்பறிவு இல்லாமல் இருக்கின்றவர்கள், மேலும் எழுதத்தெரியாதவர்கள் ஆகியோருக்கெல்லாம் இந்த சட்டமானது துன்பத்தை தரக்கூடியது என தெரிவித்தார். 31 விதமான ஆவணங்கள் குடியுரிமை பதிவேட்டிற்கு கேட்கப்படுகின்றன.  'ஒவ்வொரு தனி மனிதரும் தன்னுடைய தாய், தந்தை ஆகிய இருவரின் பிறந்த ஊர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கூறவேண்டுமாம்'. இவை நடைமுறையில் சாத்தியமில்லை என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார். சாதாரணமாக கிராமங்களில் மக்கள் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை  ஆகியவற்றை பெறவே மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

ஏன்னென்றால் அரசாங்கம் கேட்கும் ஆவணங்களை அவர்களால் தர இயலவில்லை, அதற்க்கே இந்த நிலையமை என்றால், 'குடியுரிமை பதிவேட்டிற்கு 31 ஆவணங்கள் தரவேண்டுமென்றால் அவை எப்படி சாத்தியமாகும்' என கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்தார். மேலும் ரூபாய் நோட்டுகளை மாற்றினார்கள்,  இதனால் மக்கள் அவ்வப்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகியது. இதுபோன்றே தற்பொழுது இந்த குடியுரிமை ஆவணங்களை கட்டாயமாக்கி,  மக்களுக்கு தேவையற்றதையே மோடி அரசாங்கம் செய்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனைத்து கட்சி சார்பில் ஒத்துழையாமை  இயக்கத்தை ஏற்படுத்தவுள்ளதாக  கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மேலும் அடிபட்ட மக்களின் வாழ்வியலை மாற்றிய பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கும் கண்டம் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai20

  சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

 • modi20

  வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

 • hospital20

  ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

 • kaasi sivan20

  காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்