SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேற்று சற்று சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை..: சென்னையில் சவரனுக்கு ரூ.64 அதிகரிப்பு!

2020-01-24@ 11:42:38

சென்னை: நேற்று சற்று சரிந்த நிலையில் சென்னையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றது. குறிப்பாக பெண்கள், ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு, தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்க விலை சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கிராம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.30,552 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.3,819க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50க்கு விற்பனை ஆகிறது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,000 ஆக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்