SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரைவில் வெளியாகும் ஐபோன் 9... ஒன்பிளஸ் 7Tஐ விட விலை குறைவு..!

2020-01-23@ 16:49:07

ஆப்பிள் நிறுவனம் மார்ச் அறிமுகம் படுத்தவுள்ள ஐபோன் 9, ஒன்பிளஸ் 7 T-யை விட குறைவான விலையில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு முறையும் புதிய ஐபோன் மாடல்களை வெளியிடுவதற்கு முன்பும், புதிய மாடலின் பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை மேலோங்க வைப்பதை ஒரு வியாபார தந்திரமாகவே செய்து வருகிறது. இதனாலேயே புதிய மாடல் ஐபோன்கள் வரும்போது, உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் நிறுவன கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும்.

கடைசியாக ஐபோன் 11 மாடலை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், வரும் மார்ச் மாதத்தில் ஐபோன் எஸ் இ 2 என்ற மாடலை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. அந்த மாடலை எதிர்பார்த்து, வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலையில், அது ஐபோன் 9 என அழைக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த மாடல், 2017ஆம் ஆண்டு வெளியான ஐபோன் 8ல் உள்ள அம்சங்களை அடிப்படையாக கொண்டிருக்கும் என்றும், புதிய மாடலுக்கான சோதனை முடிந்துவிட்டதால், விரைவில் சந்தைக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனத்தினர் தகவல்களை கசிய விட்டுள்ளனர். ஐபோன் 9ன் விலை நேற்று வரை மர்மமாக இருந்த நிலையில், அது ஒன்பிளஸ் 7டி-யை விட விலை குறைவாக இருக்கும் என்ற தகவலையும் ஆப்பிள் நிறுவனத்தினர் வெளியிட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு வகையான மெமரியுடன் வெளியாக உள்ள ஐபோன் 9ன் விலை, 28 ஆயிரம் ரூபாய் மற்றும் 32 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்தால், விலை இன்னும் குறையும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • accident20

    அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

  • 20-02-2020

    20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • poraattam20

    சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

  • aadi20

    மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

  • iyanman2020

    துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்