SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திறன் இல்லையா?

2020-01-23@ 00:10:28

போதிய நிதி இருந்தாலும் முடிவெடுக்கும்  திறன் மத்திய அரசுக்கு இல்லை என்று சாடியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. இந்த குற்றச்சாட்டு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது இதுவரை பா.ஜ சுமத்தி வந்தது. தற்போது முதன்முறையாக மோடிக்கே முடிவெடுக்கும் திறன் இல்லை என்று மறைமுகமாக அவரது அமைச்சரவை சகா தெரிவித்து இருப்பது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தி வந்தது. மோடியின் புகார் உண்மை தான். ஆனால் ஒரே நாளில் மோடி தனியாக பிரான்சிற்கு சென்று ஒரு விமானத்தை 567 கோடிக்கு விலை பேசியதை மாற்றி, கிட்டத்தட்ட 3 மடங்கு தொகையை கூட்டி 1650 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போட்டு விட்டு வந்தது ஒரு காலம். இப்போது நிலைமை அப்படி இல்லை போலும்.

அதைத்தான் கட்கரி, ‘நான் கடந்த 5 ஆண்டுகளில் 17 லட்சம் கோடி வேலைகளுக்கு அனுமதி வழங்கியிருக்கிறேன். இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சம் கோடி ேவலைகளுக்கு அனுமதி வழங்க இருக்கிறேன்’ என்று கூறுகிறார். அவரது பாணியில் அவர் மிகவும் சிறப்பாக முடிவெடுக்கிறார். ஆனால் மற்றவர்களால் முடியவில்லை. அதனால்தான் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் என்கிறார். நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. கடும் பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்தித்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வழி தெரியவில்லை. சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதாமாதம் கூடிக்கொண்டே செல்கிறது. அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கம் ஒரு கிராம் நகையாக வாங்கினால் ஜிஎஸ்டி மற்றும் சேதாரம் சேர்த்து கிட்டத்தட்ட 4500ஐ எட்டி நிற்கிறது.

எதையும் கட்டுப்படுத்த முடியாமல் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு பிரச்னையை கொளுத்திவிட்டு மத்திய அரசு ஒளிந்து கொண்டு நிற்கிறது. சுதந்திரம் பெற்ற பின் செங்கல், செங்கலாக அடுக்கிய கட்டிடம் ஒட்டுமொத்தமாக சரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி வேலை வழங்குவோம் என்ற முழக்கம் காணாமல் போய், ஆண்டுக்கு 2 கோடி பேர் வேலை இழந்து வரும் அவலம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதம் என்கிறது ரிசர்வ் வங்கி. இல்லை 4.8 தான் என்கிறது சர்வதேச நிதியம். அடுத்த இரண்டு ஆண்டுகளும் சரிவு தான் என்கிறது. இப்படியே போனால் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா அகற்றப்படும். அப்போது கேட்கிற இடங்களில் கடன் கிடைக்காது. அவ்வளவு தான்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்