SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மந்திரியிடம் இருந்து மா.செ பதவியை பறிக்க பகீரத முயற்சி நடப்பதை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2020-01-23@ 00:04:48

‘‘அமைச்சரின் மா.செ. பதவியை பறிக்க படுபயங்கரமா முயற்சி நடக்குதாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக பகுதி உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக பெரும்பாலான இடங்களில் தோல்வி அடைந்தது. குறிப்பாக, மாவட்ட ஊராட்சியில் மொத்தமுள்ள 34 வார்டுகளில் 9 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் முடிந்தவரை அதிகார துஷ்பிரயோகம் செய்தும் அதிமுகவினரால் வெற்றிபெற முடியவில்லை. ஒன்றியக்குழு தலைவர் தேர்தலிலும் மொத்தமுள்ள 18 ஒன்றியங்களில் 4 ஒன்றியங்களில் மட்டுமே அதிமுக வென்றது. 11 ஒன்றியங்களை திமுக கைப்பற்றியது. மேலும், திமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ள தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் தேர்தலை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், அதிமுகவின் படுதோல்விக்கு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்தான் காரணம் என அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான அக்ரி, முன்னாள் மாவட்ட செயலாளரான பெருமாள் பெயரை முன்பகுதியாக கொண்டவர், கலசப்பாக்கம் எம்எல்ஏ உள்ளிட்டோர் கொதிப்படைந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் விறுப்பு வெறுப்பு பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்தார். அவருடன் வலது, இடதாக வலம் வரும் கட்சி மாறி வந்த இரண்டு நபர்கள் சொல்வதுதான் நடக்கிறது, அமைச்சரால் சுயமாக முடிவு எடுக்க முடிவதில்லை என சரமாரியான குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள மூன்று பேரும், சொந்த கட்சியிலேயே எதிர் எதிர் துருவங்களாக இருந்தபோதும், அமைச்சரிடம் உள்ள திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை தட்டிப்பறிப்பதில் ஒருமித்த கருத்துடன் களம் இறங்கியுள்ளனர். எப்படியாவது மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்ற வேண்டும் என மூன்றுபேரும் தனித்தனியே குறிவைத்துள்ளதால், திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில் குழப்பமும், பரபரப்பும் காணப்படுகிறது’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘பொங்கல் விழாவில் என்ன பிரச்னை...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேனி மாவட்டத்துல உள்ள வைகை அணைப்பகுதி முக்கிய சுற்றுலாத்தலங்களுள் ஒன்று... இங்கு ஆண்டுதோறும் ைவகை அணையின் பெருமையை கூறும் விதத்தில், பொங்கல் பண்டிகை நாட்களில் சுற்றுலாத்துறை சார்பில் ‘பொங்கல் விழா’ விசேஷமாக நடக்கும். இதற்காக சுற்றுலாப்பயணிகள் அங்கே திரள்வார்கள். அமைச்சர்கள், கலெக்டர், உயரதிகாரிகள் எல்லாம் பங்கேற்பார்கள். விளையாட்டு, கலைநிகழ்ச்சி களைகட்டும்... மாவட்டத்தின் அடையாள பெருமையாக கருதப்பட்ட இவ்விழா, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கவில்லை. ஒவ்வோர் ஆண்டும் விழா நடக்குமென நம்பி வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது வலைத்தளங்களில் கொதிப்பாக வலம் வர, உடனே அதிகாரிகள், லோக்கல் ஆளுங்கட்சியினர், பொதுமக்களுக்கே தெரியாமல் ‘காதும் காதும்’ வைத்ததைப் போல, ‘காணும் பொங்கல்’ நாளில், ஒற்றையாக ஒரு தப்பாட்டம் நிகழ்ச்சியை மட்டும் ஒரு மணிநேரத்திற்கு நடத்தினாங்களாம்... அப்புறம் விழா நடத்தியதைப் போன்று கணக்குக் காட்டினராம்... இதில் கலெக்டர், அமைச்சர் என யாருமே கலந்து கொள்ளாததுடன், சுற்றுலாத்துறையின் அதிகாரிகள் பலருக்குமே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதே தெரியலையாம். எந்த நிதியில் இது நடந்தது என்பதும் புதிராகவே இருக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சென்னையில் இருக்குற முக்கியமான அரசு மருத்துமவனையில் திறப்பு விழாவுக்காக கட்டிடங்கள் காத்திருக்காமே’’ என்றார் பீட்டர் மாமா...
‘‘அது ஒன்னுமில்லை, சிறப்பு சிகிச்சைப்பிரிவு கட்டிடம் கட்டி ஒரு வருடம் ஆகப்போகுது. ஏற்கனவே அம்மா வரட்டும்முன்னு காத்திருக்கோம்முன்னு சொன்னாங்க... இப்போ 3வது பிளாக் கட்டி முடிக்கட்டுமுன்னு காத்திருக்காங்க’’ என்றார் விக்கியானந்தா... ‘எப்போதான் திறப்புவிழா நடத்தப்போறாங்களாம்’’ ‘‘ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி திறக்கலாமுன்னு திட்டம் போட்டிருக்காங்க. புது பில்டிங்குக்கு தேவையான டாக்டர், நர்ஸ், டெக்னீசியன் இல்லையாம்... ஆனாலும் ஏற்கனவே இருக்குறவுங்களை வைச்சே மேட்ச் பண்ணலாம்முன்னு இருக்காங்களாம் என்று பேசிக்கிறாங்க விஷயம் தெரிஞ்சவங்க’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி மாவட்ட விசேஷம் என்ன..’’

‘‘சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாங்கனி மாவட்டத்தில் மட்டும் அனைத்து முக்கிய பதவிகளையும் இலை கட்சியினர் பிடிக்க சரியான திட்டத்தை தமிழக விவிஐபி வகுத்து கொடுத்து, சாதித்து காட்டிட்டாராம். அதேபோல, வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் எப்படியும் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பொறுப்புகளை கைப்பற்ற காய் நகர்த்தி விடலாம் என்ற நம்பிக்கையில் இலை கட்சி நிர்வாகிகள் இருக்காங்களாம். விவிஐபியின் கரிசனமும், அவரின் மூவ்மெண்ட்டும் நமக்கு நன்மையை கொடுக்குமுன்னு வெளிப்படையாக பேசிக்கிறாங்க. அதிலும், கூட்டணி கட்சியினரான மாம்பழம், முரசுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தலைவர் பதவிகளை தங்கள் வசம் ஆக்கிக்கொள்ளும் சூட்சுமத்தை கற்றுக் கொடுத்துவிட்டார் நம்ம தலைவருனு பேசிக்கொள்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்