SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்துணவு முட்டை, காய்கறியில் மிச்சம் பிடித்து லஞ்சமாக கேட்கும் அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-22@ 01:41:47

‘‘பெரியார் பற்றி நடிகர் பேசியதற்கு இலை தரப்பிலேயே எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மைக் மந்திரி மட்டும் எதிர்ப்பு குரல் கொடுத்து இருக்கிறார்... மற்றபடி இலை இரட்டையர்கள் யாரும் தங்கள் கருத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை... போதா குறைக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நடிகரும் மீண்டும் பேச... அடங்கியிருந்த பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெரும்பாலான தலைவர்கள் நடிகருக்கு எதிராகவே பேச ஆரம்பித்துள்ளனர். இதனால இலை கட்சியை பற்றியும், ஆட்சியை பற்றியும் மக்கள் மறந்துவிடுவார்கள்... கொஞ்ச நாளைக்கு நடிகர் பிரச்னை தான் ஓடும்... நம்ம வேலையை நாம பார்க்கலாம் என்று இலை கட்சி மந்திரிகள் சந்தோஷத்தில் மிதக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிப்ட் தரப்பு அமைதி காக்கிறதே ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘எப்டியாவது சிறை பறவையை வெளியே கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிப்ட் தரப்பு செயல்பட்டு கொண்டு இருக்காம்... ஆனால் முழுமையாக சிறை தண்டனை அடைந்த பிறகே அவரை வெளியே விட அந்த மாநிலத்தில் உள்ள தாமரை அரசு முடிவு செய்து இருக்காம்... இதனால டென்ஷனான சிறைபறவை தான் எப்போது வெளியில் வருவேன் என்று கேட்டு நச்சரித்து வருகிறாராம்... அதற்கு கிப்ட் தரப்பில் பதில் இல்லாத காரணத்தால் முன்பு போல அடிக்கடி பெங்களூரு போவதை தவிர்த்துவிட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஏழை மாணவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் கைவைத்து மாதம் கொடுக்க வேண்டிய லஞ்சத்தை கொடு என்று எந்த மாவட்டத்தில் ஊழியர்களுக்கு கெடுபிடி கொடுக்கிறார்கள்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தென்காசியில அங்கன்வாடி ஊழியர்களை குறிவைத்து அவர்களின் உயர் அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துறாங்க. பணம் தராத பணியாளர்களுக்கு ஆய்வு என்ற பெயரில் டார்ச்சர் கொடுப்பது, அங்கன்வாடி மைய செலவு கணக்கு பில்களை இழுத்தடிப்பது போன்ற நடவடிக்கைகளால் ஊழியர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர். பணம் இல்லை என்றால்.... முட்டை, காய்கறி, அரிசி போன்றவற்றை வெளியில் விற்று கிடைக்கும் பணத்தில் லஞ்சத்தை ெகாடு என்கிறார்களாம். மாணவர்களுக்கு உணவு இல்லாமல் போகுமே என்று கேட்டதற்கு அளவுக்கு ஒரு கரண்டி சாதம் போட்டு துரத்து... அதிக மாணவர்களை கணக்கு காட்டி மீதியை பணமாக்கு என்று ஐடியாவும் கொடுக்கிறார்களாம். அதை செய்ய மறுத்தால் டார்ச்சர் தானாம். சமீபத்தில் குருவிகளின் பெயரைக் கொண்ட வட்டாரத்தில் பல மாதங்களாக நூற்றுக்கணக்கான பில்களை கட்டிப் போட்டு விட்டனராம். இது அந்த சங்கத் தலைவியின் காதுக்கு செல்ல அவர் அதிகாரிகளிடம் கெஞ்சி கூத்தாடி பில்களை போட வைத்தாராம். வாசம் வீசும் வட்டாரத்திலும் இதே வசூலை அந்த சங்க பிரதிநிதி தான் கண்டுபிடித்தாராம். ஏற்கனவே குறைந்த சம்பளம், இந்த ஊதியத்தை வைத்துக் கொண்டு கை காசைப் போட்டு காய்கறி மற்றும் பொருட்களின் செலவை சமாளித்து பில் போட்டு கொடுத்தால், அதற்கும் கமிஷனை கேட்டு நச்சரித்தால் வேலை செய்வதில் அர்த்தமே இல்லை என அங்கன்வாடி ஊழியர்கள் புலம்பி தவிக்கின்றனர். சீக்கிரமே இந்த பிரச்னை வெடிக்கும் என்கிறார்கள் அங்கன்வாடி பணியாளர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாணவர்களின் உணவில் கமிஷன் அடித்தால் உலகமே மன்னிக்காது... அதிகாரியை ஓரம் கட்டும் போலீஸ் ஏட்டு பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மத்திய சிறையில் சிறிய உயரதிகாரியான ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்தவர் பெயர் கொண்டவர் உள்ளார். இவரை பெரிய உயரதிகாரியின் ஆசி பெற்ற காவலர்கள் துளியும் மதிப்பில்லை. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைக்குள் நான் பெரிய உயரதிகாரி ஆசி பெற்றவன்... என்னை நீங்கள் எப்படி கேள்வி கேட்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட சிறைக்கு ₹50 ஆயிரம் நிதியும், காவலர் குடியிருப்பை தூய்மையாக வைத்திருக்கும் காவலருக்கு எல்இடி டிவி பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. குடியிருப்பை ஆய்வு செய்ய உயரதிகாரிகள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியிருப்புகளை சிறிய உயரதிகாரி ஜெயிலருடன் ஆய்வு செய்தார். அப்போது, பெரிய உயரதிகாரியின் உதவியாளராக உள்ள குழந்தை வேலனின் பெயர் கொண்ட ஏட்டுவின் வீட்டின் பெல் அடித்தும் திறக்கவில்லையாம். இதனால் தொடர்ச்சியாக 4 முறை பெல் அடிக்கப்பட்டதாம்.
5வது முறையாக பெல் அடித்தபோது கதவை திறந்து வந்த காவலர், ‘நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் உங்கள் விருப்பத்திற்கு குடியிருப்பை ஆய்வு செய்ய வருவீங்களா?’ என்றும், ‘நீங்கள் வரும்போது எல்லாம் திறந்து, திறந்து காண்பிக்க முடியுமா?’ என்று சிறிய உயரதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாராம். இதனால் ஆய்வுக்கு சென்ற சிறிய உயரதிகாரி... பெரிய அதிகாரியின் சப்போர்ட்டில் ஆடுகிறீர்களா... நான் ஒரு கை பார்க்கிறேன் என்று கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி போனாராம்... உயர் அதிகாரிகளிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி விட்டு வந்தாராம். பின்னர், குடியிருப்பு சுத்தமாக இல்லையென்று 219 காவலர்களுக்கு 17பி நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளார்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்