SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டங்கள்..!

2020-01-21@ 15:45:59

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சிவன், பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து, திட்டக்குழு உருவாக்கப்பட்டு, பணிகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். சந்திராயன்-3 திட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கான லேண்டரும், நிலவின் தரையில் ஆய்வு செய்வதற்கான ரோவரும் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.

லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றிற்கு 250 கோடி ரூபாயும், திட்டத்தை ஏவுவதற்கு 365 கோடி ரூபாயும் என மொத்தம் 615 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக சிவன் கூறியுள்ளார். சந்திராயன்-3 திட்டத்தை இந்த ஆண்டே ஏவுவதற்கு திட்டமிடுவதாகவும், இதற்காக 2020ஆம் ஆண்டு நவம்பரை இலக்காக நிர்ணயித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த கால அவகாசம் அடுத்த ஆண்டு வரை செல்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சிவன் கூறியிருக்கிறார்.

சந்திராயன்-2 திட்டத்தின் லேண்டர் தோல்வியடைந்தாலும், ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டுவருவதாகவும், அடுத்த 7 ஆண்டுகளுக்கு அது அறிவியல்பூர்வமான தகவல்களை வழங்கும் எனவும் அவர் விளக்கம் அளித்தார். விண்வெளிக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான வடிவமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவும், இந்தத் திட்டம் தொடர்பாக இந்த ஆண்டில் பல சோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஜனவரி 3வது வாரத்தில் மாஸ்கோவில் பயிற்சியளிக்கப்பட உள்ளதாகவும், ஆளில்லாமல் ககன்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்திப் பார்க்கும் சோதனை இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சந்திராயன்-3, ககன்யான் போன்றவற்றால் பிற திட்டங்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும், நடப்பு ஆண்டில் 25 விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும் சிவன் தெரிவித்தார். இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருப்பதாகவும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியிருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்