SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுத்து நெய்தல்?

2020-01-21@ 00:13:40

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லையென்றும், மக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும்  எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கு அளித்திருப்பது டெல்டா விவசாயிகள் மற்றும் மீனவர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. சோறுடைத்த சோழவள நாட்டை ஹைட்ரோ கார்பன் என்ற பூதம் ெதாடர்ந்து மிரட்டிக் கொண்டே இருக்கிறது. பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஹைட்ரோகார்பன்  எரிபொருள் வாழ்வாதாரத்திற்கு  எவ்வளவு முக்கியமோ, அதேபோல உணவு தரக்கூடிய விவசாய நிலமும் முக்கியம். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாத மத்திய அரசால் ஒன்றரை ஆண்டுகளாக டெல்டா மக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். இதனால் காலம், காலமாக உணவு வழங்கி வரும் விவசாயப்பூமியை சூறையாட வரும் ஹைட்ரோகார்பன் திட்டம் தேவையில்லை என்று தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

2018ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி  டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு வேதாந்தா குழுமத்திற்கும், ஓஎன்ஜிசிக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அப்போதே டெல்டா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஏற்கனவே 4 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலப்பரப்பளவு 3,200 சதுர கிலோ மீட்டர். தற்போது 5வது திட்டத்திற்கான ஏல அறிவிப்பை ஜனவரி 15ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 4 திட்டங்கள் செயல்படுத்தப்படும் மொத்த பரப்பளவை விட தற்போது 5வது திட்டத்திற்கான பரப்பளவின் அளவு பெரிது. அதாவது 4,064 சதுர கிலோ மீட்டர்.  இத்திட்ட ஏலத்திற்கு  மார்ச் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள 5வது திட்டம் புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியின் தொடக்கமும், முடிவும் புதுச்சேரியைச் சேர்ந்தவை என்றாலும், இடைப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவை. இந்தப் பகுதிகள் தான் மீன்வளம் மிகுந்த ஆழ்கடல் பகுதிகளாகும். இத்திட்டத்தை செயல்படுத்தினால் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஏற்கனவே மருதம் நிலங்களை கபளீகரம் செய்ய முயற்சி செய்யும் மத்திய அரசு தற்போது நெய்தலையும் குறிவைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது. பசுமை கொஞ்சும் வேளாண் மண்டலமாக திகழும் காவிரி டெல்டா பகுதியை ரசாயன மண்டலமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். அப்பகுதியில் வாழும் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். அத்துடன் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்