SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்னும் தெளிவில்லை

2020-01-20@ 00:45:30

தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) புதுப்பிக்கும் பணி வரும் ஏப்.1ம் தேதி தொடங்கி செப்.30ம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.   இப்பணிகளுக்கு ₹8,500 கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) தயாரிப்பதற்காகத்தான் பாஜ அரசு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கேரளா, மேற்கு வங்க மாநில அரசுகள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன.  பாஜ ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை அனுமதிக்க மாட்டேன் என  அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அசாம் மாநில பாஜ அரசும்  தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தமிழக அரசு இந்த விஷயத்தில் மவுனியாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில்  திடீரென, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர், பிறந்த தேதி, பிறந்த ஊர் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல, ஆதார், பான் எண், மொபைல் எண் போன்ற தகவல்களையும் பொதுமக்கள் விரும்பினால் தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், 2010ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு விண்ணப்பத்தில் இல்லாத, கேள்விகளை புதிதாக இணைத்துள்ளது தான் அரசின் நோக்கத்தின் மீது பொதுமக்களுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வது தொடர்பான மாநாட்டில் ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட பாஜ அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பிரதிநிதிகள் எதற்காக புதிதாக கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுப்பியதுடன் அதற்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர். எனவே, பாஜ கூறுவதை அப்படியே நம்ப எதிர்கட்சிகள் தயாரில்லை. ஏனெனில், அரசின் நலத்திட்டங்கள் பெற ஆதார் அவசியமில்லை என பாஜ அரசு சொன்னது. ஆனால், ஆதாரின்றி அணுவும் அசைவதில்லை. எனவே, தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை நடத்துவதற்கு சமாதானமாகத்தான் இவ்வாறு சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கணக்கெடுப்பை ஏப்.1ம் தேதி முதல் துவக்கும்போது, பெற்றோர் பிறந்த தேதி, ஊர் பெயரை குறிப்பிட வேண்டுமென, கட்டாயப்படுத்த மாட்டாது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக தெளிவான முறையில் மக்களுக்கு, மத்திய அரசு விளக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை எழுப்பி உள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்