SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில்வே தண்டவாளத்தில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன் மீட்பு: ரவுடி கும்பலுக்கு வலை

2020-01-20@ 00:10:25

அம்பத்தூர்: அம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகில் தண்டவாளத்தில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவனை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், அவனை வெட்டிய ரவுடி கும்பலை தேடி வருகின்றனர். அம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகில் தண்டவாள பகுதியில் நேற்று காலை ஒரு சிறுவன் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இதனை, ரயிலில் சென்ற பயணிகள் பார்த்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ஆவடி ரயில்வே போலீசாரும், அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு, ஒரு சிறுவன் கை, கால், முகம் ஆகிய பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்தான். உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், போலீசார் விசாரணையில், வெட்டப்பட்ட சிறுவன் கொளத்தூர், மகாத்மா காந்தி நகர், 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆதிகேசவன் (17) என்பது தெரியவந்தது. இவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ  பழனி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆதிகேசவனை, பழனி, அவரது நண்பர்கள் நைசாக பேசி, அம்பத்தூர் ரயில்வே தண்டவாள பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு, ஆதிகேசவனை, பழனி மற்றும் நண்பர்கள் சேர்ந்து சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில், அவன் இறந்ததாக கருதி ரயில்வே தண்டவாள பகுதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர். பின்னர், நேற்று காலையில் பார்த்த ரயில் பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ பழனி, அவரது நண்பர்களான லோகு, சுரேஷ், அந்தோனி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். அவர்களை பிடித்த பிறகு தான் ஆதிகேசவனை கொல்ல முயன்றது குறித்து காரணங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதில், பழனி மீது கொளத்தூர், புளியந்தோப்பு ஆகிய பகுதியில் குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்