SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏன் இந்த ஏற்பாடு?

2020-01-19@ 00:02:59

எழுத்தறிவு பெற்ற மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றால், அதற்கு காரணம் அரசு பள்ளிகள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏழை, எளிய மக்கள் முதல், வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் எளிதில் கல்வி கற்கும் சூழ்நிலையை முந்தைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி இருந்தனர். ஆனால், தற்போது நிலைமை தலைகீழ். கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத்தான் சூழ்நிலை கொண்டு செல்லப்படுகிறது. கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்த பின்னர், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதற்கு கடந்த 5 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் அரசு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இந்த கல்வி ஆண்டில், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபோன்ற தேர்வு முறையால், மாணவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படும் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பலன் இல்லை. பொதுத்தேர்வு எழுதும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளியில் தேர்வு எழுத முடியாது. 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிமீ தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை, தாங்கள் படிக்கும் பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்காமல், வேறொரு பள்ளியில் தேர்வு எழுத வைப்பது பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல்கள் உருவாகும் என கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் பெரும்பாலான பள்ளி மாணவர்கள், தங்களுடைய சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதுகின்றனர். ஆனால், முதல் முறையாக தேர்வு எழுதும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றி தேர்வு எழுத வைப்பது, உளவியல் ரீதியாக அவர்களிடம் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

இந்திய கல்வி முறையால், தேர்வு நேரத்தில் மாணவர்களின் இதயத்துடிப்பு மிக அதிகளவில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தங்களுக்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பள்ளியில் சென்று தேர்வுகளை அந்த பிஞ்சுக் குழந்தைகளை எழுத வைப்பது, நிச்சயம் இதயத்துடிப்பை எகிறச் செய்யும். தற்போது நடத்தப்படும் பொதுத் தேர்வின் மூலம், தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படுவது இல்லை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தாலும், மாணவர்களுக்கு இந்த புதிய நடைமுறை, கல்வி மீதான அச்சத்தை அதிகரித்து, பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்