SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆலந்தூர் மண்டி தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பை குவியல்: தீவிபத்து அபாயம்

2020-01-18@ 06:16:28

ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டி தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பை கொட்டப்படுவதால் தீவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை மாநகராட்சி, 160வது வார்டுக்கு உட்பட்ட ஆலந்தூர் மண்டி தெரு முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு, அரிசி மூட்டைகளை மொத்தமாக விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினசரி இங்கு வந்து அரிசி மூட்டைகளை வாங்கி செல்கின்றனர். இந்த தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரின் கீழ் பகுதியில் குப்பை கொட்டப்படுவதால், குவியலாக காணப்படுகிறது. நாள் கணக்கில் தேங்கும் இந்த குப்பையை துப்புரவு பணியாளர்கள் அகற்றாததால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

இந்த தெரு வழியாக தான் கோயில், பள்ளி, மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லும் நிலையில், இந்த குப்பை குவியலால் மக்கள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த குப்பை குவியலில் தீப்பிடித்தால், அது டிரான்ஸ்பார்மரில் பரவி பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும், டிரான்ஸ்பார்மரின் கீழ் பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும், என துப்புரவு ஊழியர்களிடம் பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த டிரான்ஸ்பார்மரின் கீழ் குவிந்துள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றவும், தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்