SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிக்டாக் டிரெண்டிங்

2020-01-18@ 00:03:24

நமது கையடக்கத்தில் உள்ள செல்போன் பிடியில் நாம் அனைவருமே சிக்கிக்கொண்டுவிட்டோம். சமூகவலைதளங்களில் நாள்தோறும் புதிய புதிய செயலிகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறது. இவற்றை செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமூக வலைதள செயலிகளால் நன்மைகள் இருந்தாலும், பாதிப்பும் அதற்கு இணையாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எந்தவொரு செயலியாக இருந்தாலும் கட்டுப்பாடுடன் அளவோடு பயன்படுத்தும் போது அதனால் நமக்கு நன்மையே விளைகிறது. அதே நேரம் சில செயலிகளை பதிவிறக்கம் செய்யும் மக்கள் அதற்கு அடிமையாகிவிடுவது தான் மோசமான பாதிப்புகளை தருகிறது. பொழுதுபோக்கு செயலிகள் பல உயிரையே போக்கிடும் செயலிகளாக கூட உள்ளது.

குறிப்பாக மாணவர்கள் விளையாடும் பப்ஜி போன்ற செயலிகளால் பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. செல்போனில் மக்கள் தற்போது அதிகளவில் பயன்படுத்தும் செயலிகள் வரிசையில், வாட்ஸ்ஆப், டிக்டாக், பேஸ்புக் இடம்பிடித்துள்ளன. இந்த செயலிகள் அன்றாட தேவையாகவும், வாழ்க்கையின் அங்கமாகவும் மாறிவிட்டன. வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றத்துக்கு மிகச்சிறந்த செயலியாக விளங்குகிறது. கடந்த ஆண்டு 85 கோடி பேர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் அறியப்பட்டுள்ளது. இதே போன்று பேஸ்புக் செயலியையும் பலகோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பேஸ்புக் செயலியை பின்னுக்கு தள்ளி கடந்தாண்டு டிக்டாக் செயலி 39 சதவீதம் அதிகரித்து முன்னேறியுள்ளது. அதாவது 70 கோடி மக்கள் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.

இந்த செயலியை பாடல்களை பாடுவது, நடிப்பது, நகைச்சுவையை வெளிப்படுத்துவது என்று பலர் தங்கள் திறமைகளை உலா வரவிடும் பொதுமேடையாக பயன்படுத்துகின்றனர். இளைஞர்கள், மாணவிகள், இல்லத்தரசிகள், அலுவலகம் செல்வோர் என்று அனைத்து தரப்பினரும் டிக்டாக் செயலி ரசிகர்களாக விளங்குகின்றனர். வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் இருக்கும் ஆபத்து இந்த செயலியிலும் இருக்கத்தான் செய்கிறது. முகநூலை போன்று டிக்டாக் செயலியிலும் ஹேக்கர்களால் அதிகளவு ஆபத்துள்ளது என்று செக்பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் ஆபத்தை உணர்ந்திருந்தாலும் மக்களிடம் டிக்டாக் மோகம் குறைந்தபாடில்லை. இந்த செயலி மூலம் டிரெண்டிங் ஆகி பிரபலமடைந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தவறான தொடர்பால் சிக்கி பிரச்னைகளை சந்தித்தவர்களும் இருக்கிறார்கள். கைபேசியில் இருக்கும் செயலியை பயன்படுத்தும் போது சுயகட்டுப்பாடும் அவசியமாகிறது. முன் பின் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும், எந்த நாட்டில் வசிப்பவர்களானாலும் இந்த செயலிகள் மூலம் தொடர்பு கொள்ள முடிகிறது. எனவே, இவற்றை உணர்வுபூர்வமாக பயன்படுத்தாமல், நமது தேவைக்குத் தான் செல்போன் மற்றும் சமூகவலைதள செயலிகள் என்பதை உணர்ந்துகொண்டு பயன்படுத்தினால் ஆபத்து நெருங்காது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்