SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கலில் மின்வாரியம்

2020-01-17@ 00:57:35

தமிழக மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. மத்திய அரசிடம் உதவி கேட்டு போயிருக்கிறார் மின்துறை அமைச்சர் தங்கமணி. ஆனால் வெறுங்கையோடு திரும்பி வந்திருக்கிறார். அப்படி திருப்பி அனுப்பியிருக்கிறது மத்திய அரசு. அவர்கள் சொல்வதை தமிழக அரசு கேட்கவில்லை என்ற கோபம். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் வாங்கிய மின்சாரத்திற்கு 11,728 கோடி மின்வாரியம் வழங்க வேண்டும். அதே சமயம் தமிழக அரசு துறைகள் 1500 கோடியை மின்வாரியத்திற்கு வழங்க வேண்டும். இந்த இரண்டு பிரச்னைகளையும் அடுத்த 3 மாதங்களுக்குள் சரிசெய்யாவிட்டால் நிதி வழங்க மாட்டோம், மின் திட்டங்களுக்கு கடன் உதவி செய்ய மாட்டோம் என்பது மத்திய அரசின் மிரட்டல். ஆனால் இதையெல்லாம் சரிசெய்ய முடியாத தூரத்தில் மின்வாரியத்தின் நிதிநிலைமை உள்ளது.

தமிழகத்தின் தினசரி மின்சார தேவை 13,215 மெகாவாட். தற்போதைய உற்பத்தி 2974 மெகாவாட் தான். தமிழகம் உற்பத்தி செய்ய வேண்டிய 7158 மெகாவாட் மின்சாரத்தில் தற்போது 4184 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை. எனவே தினமும் 4881 மெகாவாட் மின்சாரம் மத்திய திட்டங்கள் மூலமும், 5360 மெகாவாட் தனியார் மின்திட்டங்கள் மூலமும் வாங்கப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.  கூடுதல் விலை கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்வதால் ஒவ்வொரு மாதமும் மின்வாரிய இழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 8 ஆயிரம் கோடி இழப்பு கூடிக்கொண்டே போகிறது.

இதனால் மின்வாரியத்தின் மொத்த கடன் 1.50 லட்சம் கோடியை நெருங்கி விட்டது. இப்போது 12 ஆயிரம் மெகாவாட் மின்திட்டங்களை தொடங்க வேண்டிய நிலையில் மின்வாரியம் உள்ளது. 5700 மெகாவாட் மின்திட்டங்களுக்கு வேலை நடக்கிறது. இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தேவை. ஆனால் தமிழக திட்டங்களை முடக்கும் மனநிலையில் மத்திய அரசு செயல்படுகிறது. இப்படியே சென்றால் மீண்டும் மின்கட்டண உயர்வு மேற்கொள்ளப்படும். அதோடு இலவச மின்சாரம் ரத்து, மின்வாரிய மானியம் ரத்து உள்ளிட்ட அத்தனை கடும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு மின்வாரிய குளறுபடி சுமைகள் மக்கள் தலையில் சுமத்தப்படும். ஏற்கனவே மின் இணைப்பு கட்டணம் கடுமையாக உயர்ந்து விட்டது. அடுத்தது வீடுகளுக்காக மின் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தும் முடிவில் மின்வாரியம் உள்ளது. ஏற்கனவே 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாமல் மின்வாரிய ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை வேறு. இப்போது நிதி நெருக்கடியால் மின்வாரியம் மீளவே முடியாத சிக்கலில் தவிக்கிறது. கிட்டத்தட்ட திவால் நிலை. இது பொதுமக்களுக்கு ஆபத்து. இனி வரும் காலங்களில் பல மணி நேர மின்தடை கூட வரும் சூழல் காத்திருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்