SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாய்ண்ட்...

2020-01-17@ 00:31:52

* கிரிக்கெட் ரசிகை சாருலதா விடைபெற்றார்
உலக கோப்பை கிரிக்கெட் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போது ரசிக்களை கவர்ந்தவர்கள்  சாருலதா படேல்(87). இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் வசித்த இவர் தீவிர கிரிக்கெட் ரசிகை. உலக கோப்பையில் இந்தியா விளையாடும் ஆட்டங்களை தள்ளாத வயதில் நேரில் கண்டு ரசித்தார். அப்போது இந்திய வீரர்களை கைகளை தட்டியும், ஊதுகுழலில் ‘பீப்பீ’ ஊதியும் உற்சாகப்படுத்திய காட்சிகள் அவரை கவனிக்கவைத்தன. இந்தியா-வங்கதேசம் இடையிலான போட்டியின் போது அவரிடம் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி ஆகியோர் ஆசி பெற்றனர். அப்போது அவர்களை உச்சிமுகர்ந்து முத்தமிட்ட படங்கள் வைரலாகின.

பின்னர் பேட்டி ஒன்றின் போது, ‘கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ல் கோப்பையை வென்ற போட்டியையும் தான் நேரில் பார்த்து ரசித்ததாக’  தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜன.13ம் தேதி லண்டனில் வயது மூப்பின் காரணமாக சாருலதா காலமானதாக  தகவல் வெளியாகி உள்ளது. அதனையடுத்து மூத்த ரசிகை சாருலதா படேலுக்கு சர்வதேச கிரிக்கெட் சங்கம்(ஐசிசி), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ), மும்பை இந்தியன்ஸ் அணி, ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்கள், ஏராளமான ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* ஹோபர்ட் டென்னிஸ் அரையிறுதியில் சானியா ஜோடி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஹோபர்ட் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில்  இந்தியாவின் சானியா மிர்சா,  உக்ரைன் வீராங்கனை நடியா கிச்சனோக்குடன் இணைந்து விளையாடி வருகிறார். அங்கு நேற்று நடைப்பெற்ற காலிறுதிப் போட்டியில் இந்த ஜோடி, அமெரிக்காவின் வனியா கிங்/கிறிஸ்டீனா மெக்ஹலே ஜோடியுடன் மோதியது. இந்த 2 ஜோடிகளும் தலா ஒரு செட்டை கைப்பற்றின. தொடர்ந்து 3வது செட்டில் சானியா மிர்சா/நடியா கிச்சனோக் இணை டை பிரேக்கரில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தியது. அதனால் 6-2, 4-6, 10-4 என்ற புள்ளி கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

* தொடங்கியது வாலிபால்
மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டி திருவாரூரில் நேற்று தொடங்கியது. போட்டி சிறுவர்கள், சிறுமிகள் 2 பிரிவாக நடைபெறும். இந்தப்போட்டியின் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஜன.20ம் தேதி நடக்கும். இந்தப்போட்டியின் மூலம் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள்  தமிழ்நாடு அணிகளுக்காக, ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ராஜம்பேட்டையில் ஜன.26ம் தேதி தொடங்கும் தேசிய அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டியில் பங்கேற்பார்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்