SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொன்னானவர் மீது மைக் மந்திரி அதிரடியாக தாக்கிய விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-15@ 01:12:21

‘‘மைக் மந்திரி ஏன் டென்ஷன் ஆயிட்டாரு...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தில் தீவிரவாதிகள் இருக்காங்க.. அவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை என்று பொன்னானவர் பேசினாரில்லே... இது ரொம்பவே இலை தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்காம். மத்திய அரசு சமீபத்தில்தான் தமிழக அரசுக்கு சிறந்த காவல் துறை விருதை அளித்தது. அதை அசிங்கப்படுத்துவதா என்று இலை தரப்பில் கோபம் கொப்பளித்ததாம்... இதனால மைக் மந்திரியை அழைத்து லெப்ட் ரைட் வாங்கச் சொன்னாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதற்காக இப்படியா கண்டபடி விமர்சிப்பது...’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.‘‘ம். தாமரை கட்சியில் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இலை தரப்பின் மீது பாய்ச்சல் காட்டுகிறார். மத்திய அரசு கொடுத்த விருதை அவரது கட்சிக்காரரே குறை சொல்வதா... அவர் விமான பயணம்... பேட்டி... மீண்டும் விமான பயணம்னுதான் இருந்தாரே தவிர தமிழகத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவர் அமைச்சராக இருந்ததே வேஸ்ட் என்ற ரீதியில் தாளித்து எடுத்துவிட்டார்... மேலிட அனுமதி இல்லாமல் மைக் மந்திரி வறுத்தெடுத்ததை டெல்லி மேலிடத்துக்கு பொன்னானவர் கொண்டு சென்றுள்ளாராம்... அவர்கள் அப்புறம் அதை பற்றி பேசலாம் என்று சொல்லிவிட்டார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாங்கனி மாவட்டத்துல சொந்த கட்சியின் கால் வாரிய இலை நிர்வாகியை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘உள்ளாட்சி தேர்தலில் பதவியை பிடிக்க  வைட்டமின் ‘ப’ வை வாங்கிக் கொண்டு ஓட்டுகளை  மாற்றி போட்ட சம்பவமும் நடந்திருக்காம். குறிப்பா பனமரத்துப்பட்டி ஒன்றியத்துல தலைவர் பதவிக்கு ஒன்றிய செயலாளரும், துணை செயலாளர் மகளும் மல்லுகட்டுனாங்க. ஆனால் செயலாளருக்குத்தான் மேலிடம் ஆதரவு. ஓட்டுப்பதிவின் போதும் அந்த ஒரு ஓட்டு மாறி விழுந்தும் அவரே ஜெயிச்சிட்டாராம். ஆனா துணைத்தலைவர் தேர்தல்ல இலை கூட்டணி கட்சி தோத்துப்போச்சாம். இதுபற்றி சேலம் புறநகர் மாவட்ட செயலாளரா இருக்கிற தமிழக விவிஐபியின்  கவனத்திற்கு கொண்டு போனாங்களாம். மம்மி போல கட்சிய கட்டுக்கோப்பா வச்சிருக்கிற என் மாவட்டத்திலே என் பேச்ச கேக்கலையான்னு ஆத்திரம் அடைந்த விவிஐபி, ஒன்றிய துணை செயலாளர கட்டம் கட்டிட்டாராம். இதனால தேர்தல்ல உள்ளடி வேலை செய்த இலைக்கட்சிக்காரங்க எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு நடுக்கத்துல இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பதவியை பிடிக்க கோயிலில் பூஜை நடத்திய அரசியல்வாதியை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் அமைச்சராக இருந்த போது 5 ஆண்டுகளில் மூன்று துறைகளுக்கு பவர்புல் அதிகாரத்துடன் இருந்தவர். அங்கு சூழ்நிலை சரியில்லை என்பதால் தாமரை கட்சியில் இணைந்த அல்வா மாவட்டத்தை சேர்ந்த அந்த மாஜி அமைச்சர் பூஜை, பரிகாரத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். இப்போது மத்தியில் ஆட்சி நடந்தும் தனக்கு அதிகாரம் இல்லையே என்ற ஆதங்கம். ஏற்கனவே மக்களவை தேர்தலில் வாய்ப்பு கிடைத்த போதிலும் வெற்றியை ருசிக்க முடியவில்லை. இதனால் தேசிய கட்சியில் தற்போது காலியாக இருக்கும் மாநில தலைவர் பதவிக்கு குறி வைக்கிறார். பழம் நழுவிப் பாலில் விழாதா என்பதற்காக கோயில்களில் பரிகார பூஜை செய்து வருகிறார். சமீபத்தில் பாபநாசம் கோயிலுக்கு சென்ற அவர் குடும்பத்துடன் பூஜை செய்து வழிபட்டுள்ளார். மாநில தலைவர் பதவியை குறி வைத்துத்தான் இந்த பூஜையை அவர் நடத்தியதாக கோயில் வட்டாரங்கள் தகவல். யாருக்கு யோகம் அடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...’’ என்கின்றனர் அவரது அடிபொடிகள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குமரியில என்ன நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குமரி மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் பதவிக்கு இலை, தாமரை நிர்வாகிகள் நேரடியாக மோதினர். மொத்தம் உள்ள 15 உறுப்பினர்களில், இலை சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர் 8 ஓட்டுக்கள் வாங்கி தலைவர் ஆகி விட்டார். தாமரை சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் தோல்வியை தழுவினார். இந்த தோல்வியால் தாமரை கட்சியினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். எப்படியும் இதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என முடிவு செய்து இருக்கிறார்களாம். அடுத்து வரும் நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் நிச்சயம் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்களாம். இலையில் யாரும் இதற்கான திட்டத்தை வகுத்து, லட்சங்களை வாரி கொடுத்தது என விசாரித்து வருகிறார்களாம்.  ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தை பொறுத்தவரை தாமரைதான் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி. நமது ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி கூட்டம் நடக்கிறது என்று பார்ப்போம் என்றும், சவால் விட்டு உள்ளார்களாம்.

‘‘சிவகங்கை சீமையில ஒரே கலவரமாமே.. அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாவட்ட ஊராட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இன்னும் இழுபறி நீடிக்கிறது. சூரியன், இலை அணி கவுன்சிலர்கள் எண்ணிக்கை சமமாக உள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதில் இலை தரப்பு தொடர்ந்து பேரம் நடத்தி வருகிறதாம். லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் முயற்சி செம ஜரூராக நடக்கிறதாம். முயற்சி பலிக்கும் வரை தேர்தல் நடத்துவதை தாமதப்படுத்தி, ‘எல்லாம் முடிந்ததும்’ அதன் பிறகு நடத்த உள்ளனராம். வெளிப்படையாகவே அதிகாரிகள் இலை கட்சிக்கு கைப்பாவையாக செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்