SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருங்கல் புதையல் விவகாரம் பெண் இன்ஸ்பெக்டர், 2 போலீசாருக்கு நிபந்தனை ஜாமீன்: இரணியல் கோர்ட்டில் தினசரி 2 முறை ஆஜராக வேண்டும்

2020-01-14@ 20:32:08

கருங்கல்: கருங்கல் புதையல் விவகாரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இரணியல் கோர்ட்டில் தினசரி 2முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின்  (26). ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ஜேசிபி டிரைவராக இருந்தார். திடீரென இவர் வீடு கட்டியதுடன், சொந்தமாக கார்களையும்  வாங்கினார். ஜேசிபி தோண்ட சென்ற இடத்தில் தங்க புதையல் கிடைத்ததே, ஜெர்லின் வளர்ச்சிக்கு காரணம் என அந்த பகுதியில் வதந்தி பரவியது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மான்கறி வாங்கி தருவதாக கூறி ஜெர்லினை ஒரு கும்பல் காரில் கடத்தியது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கும்மளம்பாடு என்ற இடத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு கொண்டு சென்று, ஜெர்லினை மிரட்டி வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கினர். மேலும் அவரின் இரு கார்கள், 5 பவுன் செயின், இரண்டரை பவுன் காப்பு ஆகியவற்றையும் பறித்துள்ளனர். பின்னர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த ஜெர்லின் , தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அப்போதைய குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக்கிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கருங்கல் அருகே உள்ள உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயராஜன், கருங்கல் கப்பியறை பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்ற ெஜய ஸ்டாலின், கடமலைக்குன்று பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், நாகர்கோவில் அருகே உள்ள புத்தளம் பகுதியை சேர்ந்த ராஜ அருள்சிங், அவரது சகோதரர் ராஜா அஸ்வின் மற்றும் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பள்ளிவிளையை சேர்ந்த ஜெயன் ராபி, கிருஷ்ணகுமார் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது கடத்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் கருங்கல் போலீசில் வழக்கு பதிவு செய்தனர். இதில் சுரேஷ்குமார், ஜெயன் ராபி, கிருஷ்ண குமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் சுரேஷ்குமார், நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் சுரேஷ்குமார், அளித்த வாக்குமூலத்தில் அப்போதைய கருங்கல் இன்ஸ்பெக்டராக இருந்த பொன் தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு ஜோன்ஸ் ஆகியோர் உதவியுடன் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் பொன் தேவி உள்பட 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மனித உரிமை ஆணையமும் இது தொடர்பான விசாரணையில் இறங்கியது. இதற்கிடையே தங்களுக்கு இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி இன்ஸ்பெக்டர் பொன்தேவி உள்பட 3 பேரும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர் பொன்தேவி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும். மேலும்  இரணியல் கோர்ட்டில் தினமும் காலை மற்றும் மாலையில் மறு உத்தரவு வரும் வரை கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வழங்கி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதே போல் எஸ்.எஸ்.ஐ. ரூபன், ஏட்டு ஜோன்ஸ் ஆகியோருக்கும் இதே நிபந்தனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

 • chinnaa_hospiitt1

  25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

 • vinveli_sathanaiiii1

  விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

 • landlide_floodd_11

  பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்