SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கயம் அருகே நூதன முறையில் ரூ.16 லட்சம் கொப்பரையை கேரளா கடத்திய 3 பேர் கைது

2020-01-14@ 19:47:34

காங்கயம்: காங்கயத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள கொப்பரையை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள கொப்பனூர்புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், கொப்பரை வியாபாரி. இவர், காங்கயம் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் ஒரு கொப்பரை களத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு தேங்காய்களை உடைத்து உலர்த்தி சேமித்து வைத்து, தேவையான எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். கொப்பரை குடோன் மேலாளரான தமிழ்செல்வனுக்கு கடந்த 11ம் தேதி காங்கயம் திருப்பூர்- ரோட்டில் உள்ள ஒரு லாரி ஆபீசில் இருந்து கேரளா செல்லும் லாரி வந்துள்ளது. அதில் வந்தவர்கள் கேரளாவிற்கு கொப்பரை லோடு இருக்கிறதா? எனக் கேட்டுள்ளனர். கேரளாவிற்கு லோடு இருந்ததால் லாரியை வரச்சொல்லுமாறு தமிழ்செல்வன் கூறியுள்ளார். அதன் பின்னர் 3 பேர் கும்பல் லாரியுடன் காமாட்சிபுரத்தில் உள்ள கொப்பரை உலர வைக்கும் களத்திற்கு வந்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஜலகுடாவில் உள்ள ஒரு ஆயில் மில்லுக்கு லோடு இருந்தது. மொத்தம் 320 மூட்டைகளில் 15 ஆயிரத்து 600 கிலோ (15.6 டன்) கொப்பரையை, லாரியில் ஏற்ற தமிழ்செல்வன் பில் போட்டு தயாராக வைத்திருந்தார்.

 லாரியில் ஏற்றும்போது, லாரியின் பதிவுசான்று, டிரைவரின் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை தமிழ்செல்வன் கேட்டுள்ளார். அவை பெருந்துறையில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் இருப்பதாகவும், அதை எடுத்து வந்து கொடுத்துவிட்டு லாரியை எடுத்து செல்வதாகவும் 3 பேரும் கூறினர். அதைத்தொடர்ந்து இரவு 8 மணியளவில், லோடு தொடர்பான சம்பந்தப்பட்ட பில்களை அங்கு அலுவலக அறை டேபிளில் வைத்துவிட்டு, தமிழ்செல்வன் பாத்ரூம் சென்றுள்ளார். சிறிது நேரத்துக்கு பின்னர் வந்து பார்த்தபோது லோடு ஏற்றிய லாரியையும், அலுவலகத்தில் டேபிளில் வைத்திருந்த பில்லையும் காணவில்லை. அக்கம்பக்கம் எங்கு தேடியும் காணவில்லை. லாரியையும், அதில் வந்த 3 பேரும் மாயமாகியிருந்தனர்.

 இதுபற்றி தமிழ்செல்வன் அளித்த புகாரின்பேரில் காங்கயம் போலீசார் தனிப்படை அமைத்து லாரியை தேடியபோது, கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள கொல்லங்கோடு பகுதியில் நிற்பது தெரிய வந்தது.  விசாரணையில், அங்குள்ள ஒரு குடோனில் கொப்பரையை இருப்பு வைப்பதாக சொல்லி லாரியில் இருந்து இறக்கிவிட்டு சென்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  அவர்கள், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சக்திநகரை சேர்ந்த அருணகிரிநாதன் (46), திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மணப்பாறையை சேர்ந்த பிரபாகரன் (29), கேரள மாநிலம் பாலக்காடு க்ரீம்மா பகுதியை சேர்ந்த ஹைட்ரோஸ் (46) என்பது தெரியவந்தது. அவர்கள் தமிழ்செல்வனை ஏமாற்றி கொப்பரையை கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

 • chinnaa_hospiitt1

  25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

 • vinveli_sathanaiiii1

  விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

 • landlide_floodd_11

  பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்