SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபரணத் தங்கத்தின் விலை சரசரவென சரிவு : 6 நாளில் சவரன் ரூ,1,320 வரை குறைந்து ரூ.30,112க்கு விற்பனை

2020-01-14@ 10:50:05

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 144 ரூபாய் குறைந்துள்ளது.  சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நகை வாங்க அதிகம் செலவிட வேண்டியிருக்கிறதே என்ற கவலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நற்செய்தியாக இன்று தங்கம் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று(ஜன.14) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.18 குறைந்து, ரூ.3,764க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.144 குறைந்து, ரூ.30,112க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.47.30க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 47.300-க்கும் விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை 6 நாளில் சவரனுக்கு ரூ,1,320 வரை குறைந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

  • chinnaa_hospiitt1

    25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

  • vinveli_sathanaiiii1

    விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

  • landlide_floodd_11

    பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்