SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாசன்-சிக்ஜரூர் இடையேயான 160 கி.மீ தூர அகல ரயில்பாதையை அஜய்குமார் சிங் ஆய்வு செய்தார்

2020-01-14@ 07:21:31

பெங்களூரு: மைசூரு மண்டலத்திற்கு உட்பட்ட ஹாசன்-சிக்ஜரூரு இடையே உள்ள அகல ரயில் பாதையை தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் அஜய்குமார் சிங் ஆய்வு செய்தார். மைசூரு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ஹாசன்-சிக்ஜரூரு இடையே 160 கிமீ தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடப்பு ஆண்டுக்கான ஆய்வு பணிகளை தென்மேற்கு ரயில்வே ெபாது மேலாளர் அஜய்குமார் சிங், மைசூரு ரயில்வே மண்டல மேலாளர் அபர்னாகர்க் உள்பட பல்வேறு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து தென்மேற்கு ரயில்வே பெண் ஊழியர் நலச்சங்க தலைவர் ராம வாடிகா சிக்ஜரூரு ரயில் நிலையம் எதிரே சிறுவர்களுக்கான பூங்காவை திறந்துவைத்தார். இதை தொடர்ந்து ரயில் நிலையங்களில் பசுமை திட்டத்திற்கு பயன்படுத்தும் நர்சரியை திறந்துவைத்தார்.

பின்னர், லெவல் கிராசிங் எண் 85ல் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கும்படி தென்மேற்கு ரயில்வே பொதுமேலாளர் அஜய்குமார் சிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேவனூரு ரயில் நிலையத்தில் அஜய்குமார் சிங் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.இதேபோல், அந்த மார்க்கத்தில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் ஆய்வு செய்தார் அஜய்குமார் சிங். அரசிகெரே எம்.எல்.ஏ. சிவராமகவுடாவின் கோரிக்கையை ஏற்று அரசிகெரே பகுதியில் உள்ள லெவல் கிராசிங்குகளை அகற்றி விட்டு வாகனங்கள் தடையின்றி செல்ல மேம்பாலம் கட்டப்படும் என அஜய்குமார் சிங் உறுதி அளித்தார். மேலும், ஹாசன் நாடாளுமன்ற எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் கோரிக்கையை ஏற்று ஹொளேநரசிபுராவில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக மேலும் ஒரு மேம்பாலம் கட்டப்படும் என அஜய்குமார் சிங் உறுதி அளித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்