SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதுகெலும்பு முக்கியம்

2020-01-14@ 01:07:10

உலகிற்கே உணவு கொடுக்கும் உன்னத பணியை செய்து வரும் விவசாயிகளின் தற்போதைய நிலை செழிப்பாக இல்லை. வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நமது தேசத்தில் தான், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையும் தொடர்கிறது. நாடு முழுவதும் கடந்த 2018ம் ஆண்டில் 10,349 விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. விளைநிலங்கள் எப்போது வீட்டடி மனைகளாக மாறியதோ, அப்போதே விவசாயத்தின் அழிவும் தொடங்கிவிட்டது. விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு கொண்டு வருகிறது. ஆனாலும், விவசாயம் வளர்ச்சி அடையவில்லை. அரசு அறிவிக்கும் திட்டங்கள் முறையாக விவசாயிகளுக்கு செல்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அரசு அறிவித்துள்ள பல திட்டங்கள் குக்கிராமங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு தெரிவதில்லை. எனவே விவசாய திட்டங்கள் குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.

அப்படியே அரசு அறிவிக்கும் திட்டங்கள் விவசாயிகளைச் சென்றடைந்தாலும், திட்டத்தின் பலனில் பெரும் பகுதியை லஞ்சமாகக் கொடுக்கவேண்டிய பேரவலமும் தொடர்கிறது. விவசாயத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல புதிய குழுக்கள் அமைக்க தேவையில்லை. இருக்கும் வேளாண் அமைப்புகள் ஒழுங்காக செயல்பட்டாலே போதும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்தால், தண்ணீரை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறைந்த முதலீடு செய்து, அதிக லாபம் பெறுவது எப்படி? காலநிலைக்கு ஏற்றவாறு பயிரிடுவது உள்ளிட்ட பல்வேறு  ஆலோசனைகளை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.விவசாயத்தை காத்து, அதை நவீன அறிவியல் மூலம் புதுப்பிக்க வழிவகை செய்யாவிட்டால், தண்ணீர் மற்றும் வெங்காயத்துக்கு ஏற்பட்ட நிலைபோல், பசி தீர்க்கும் உணவுக்கும் ஏற்படும் நிலை வெகுதொலைவில் இல்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசே கொள்முதல் செய்யலாம்.

தற்போது படித்த பட்டதாரிகள் ஏராளமானோர் விவசாயம் செய்ய முன்வருவது மகிழ்ச்சியான விஷயம். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயத்துக்கு எளிதான முறையில் வங்கிக்கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
விவசாயிகளை நேரிடையாக சந்தித்து, அவர்கள் சந்திக்கும் பிரச்னை என்ன என்பதை அறிந்து, அதற்கு மாற்று வழிகளை உருவாக்கவேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலத்தை கையகப்படுத்துவது ஏற்புடையதல்ல. சாலை மற்றும் பல்வேறு பணிகளுக்கு விளைநிலங்கள் மீது கை வைக்காமல் வெளிநாடுகள் போல மாற்று வழிகளை கடைப்பிடிக்கலாம். டிஜிட்டல் காலத்தில் அறிவியல், அதிநவீன தொழில்நுட்பங்களில் அசுர வளர்ச்சி அடைந்தாலும், விவசாயம் தான் நம் முதுகெலும்பு என்பதை புரிந்து கொண்டு அரசு நடவடிக்கை எடுத்தால்... வரப்போகும் உழவர் திருநாள், பசிதீர்க்கும் விவசாயிகள் வாழ்க்கைத்தரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என உறுதியாக நம்பலாம்!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்