SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல வகையான ஏவுகணைகளுடன் 4ம் தலைமுறை போர்கப்பலை கடற்படையில் சேர்த்தது சீனா

2020-01-13@ 00:52:40

பீஜிங்: பல வகையான ஏவுகணைகளை ஏவும் திறனுடைய 4ம் தலைமுறை போர்க்கப்பலை சீனா தனது கடற்படையில் நேற்று சேர்த்தது. சீனா தனது கடற்படையை வேகமாக மேம்படுத்தி வருகிறது. தற்போது, ‘நான்சாங்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட 4ம் தலைமுறை போர்க்கப்பலை, கடற்படையில் நேற்று இணைத்தது. இதில் வான் பாதுகாப்பு ஏவுகணை, கப்பலை தாக்கும் ஏவுகணை, நீர்மூழ்கி கப்பலை தாக்கும் ஏவுகணை, தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த போர்க்கப்பல் 180 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும், 10 ஆயிரம் டன் எடையும் கொண்டது. சீனாவின் விமானம் தாங்கி போர்க் கப்பல்களுக்கு பாதுகாப்பாக செல்ல இந்த நான்சாங் கப்பல் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் செல்லாமல் தனியாக போர்க்கப்பல் குழுவுடன் சென்று பலவிதமான தாக்குதல் நடத்தும் திறனும் இந்த போர்க்கப்பலுக்கு உள்ளது. இதேபோல், மேலும் 5 போர்க்கப்பல்களை கட்டும் பணிகள் சீனாவின் தலியன் கப்பல் கட்டும் தளத்தில் வேகமாக நடந்து வருகிறது. சீன கடற்படையில் தற்போது 2 விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. எதிர்காலத்தில் 5 முதல் 6 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கட்டுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. அந்த கடற்படையில் தற்போது 68 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்