SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிப்.5ம் தேதி சமஸ்கிருதத்தில் நடத்த எதிர்ப்பு தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு விழா: மதுரை உண்ணாவிரதத்தில் சித்தர்கள் வலியுறுத்தல்

2020-01-13@ 00:29:04

மதுரை: நாடு செழிப்படைந்து மக்கள் மகிழ்வுடன் வாழ, தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த மதுரையில் நடந்த சித்தர்களின் உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு வைபவத்தை ஆகம விதிமுறைப்படி செந்தமிழில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் முன்பு நேற்று சித்தர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதற்கு காரைக்குடி பதினெண்சித்தர் அரசு யோகி கரூரார் திருக்கோயில் அறக்கட்டளை நிறுவனர் நியமநாதர் தலைமை வகித்தார். சத்யபாமா அறக்கட்டளை நிறுவனர் சத்யபாமா முன்னிலை வகித்தார். ஐகோர்ட் வழக்கறிஞர் பாபுஜெகநாத், அறக்கட்டளை நிர்வாகிகள் பாண்டியராஜ், வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தஞ்சை கோயிலில், செந்தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென வலியுறுத்திப் பேசினர். இதில் 98 ெபண் சித்தர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர்.

உண்ணாவிரத பந்தலில், நியமநாதர் சித்தர் கூறுகையில், ``தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா சமஸ்கிருதத்தில் நடத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் நடத்தக்கூடாது, தமிழில்தான் நடத்த வேண்டும் என ராஜராஜசோழனின் அரண்மனையிலிருந்த அரசு யோகி கரூரார் தெரிவித்தார். ஆனால், கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறையும் ஏற்கவில்லை. 1997ம் ஆண்டு சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடந்தது. அப்போது யாகசாலையில் தீவிபத்து ஏற்பட்டு 48 பேர் பலியானார்கள். இதனையடுத்து, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய குடமுழுக்கு விழாவை, இரு தினங்களிலேயே நடத்தினார்கள். இதனால்தான் நாட்டின் வளம் குறைந்து, அதிகளவில் உயிரிழப்புகளும் வறுமையும் ஏற்பட்டு வருகிறது. இக்கோயில், தமிழ் ஆகம விதிமுறைப்படி கட்டப்பட்டது. நாடு செழிப்படைந்து, அனைவரும் அனைத்தும் பெற்று மகிழ்வுடன் வாழ, வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்க உள்ள குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்