SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோரம் இல்லாததை காரணம் காட்டி இலை தரப்பு உள்ளாட்சி தேர்தலில் கோரத்தாண்டவம் ஆடியதை சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-13@ 00:03:46

‘‘என்ன விக்கி உள்ளாட்சி தேர்தலில் இப்படியெல்லாமா கோல்மால் செய்வாங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதான் செஞ்சுட்டாங்களே...கோரத்தை காரணம் காட்டி இலையின் தலைமையின் பேச்சை கேட்டு கோரத்தாண்டவம் ஆடிட்டாங்க... இது குறித்து இலை தரப்பு கமுக்கமாகவே இருக்கிறது... அதிகாரிகளையும் அடக்கி வாசிக்க சொல்லி இருக்காங்க... பக்காவாக திட்டம் போட்டு பல இடங்களில் தேர்தலை நிறுத்தி வைச்சுருக்காங்க... அதுக்கு என்ன அர்த்தம் என்றால் பதவியை கைப்பற்றும் குதிரைபேரம் இன்னும் முடியவில்லை என்பதுதான். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற கதவை தட்ட முடிவு செய்து இருக்காங்களாம்... ஆனால் அதற்கும் மாநில தேர்தல் ஆணையம் சரியான பதிலை கொடுக்க தயாராகிட்டு இருக்காங்களாம்... இதனால உள்ளாட்சி தேர்தல் இன்னும் முடிந்த மாதிரி எடுத்துக் கொள்ள முடியாது... அது இன்னும் தொடரும்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பழிவாங்கல் தொடங்கிடுச்சு போல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடந்த உள்ளாட்சி தேர்தல் வரலாற்றை புரட்டி பார்த்தால்... அதிகளவு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள்... கொலை, அடிதடி, கொலை முயற்சி போன்ற எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே நடந்து இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அதனால உள்ளூர் போலீசார் இதை கண்காணிக்க வேண்டும். உயிர் இழப்பை தடுக்க வேண்டும் என்று உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்காம்... அதனால மாநிலம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவு போயிருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாமூல் வசூலிக்க ஆட்களை நியமித்து சம்பளமும் கொடுத்த அதிகாரி யாரு...’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.‘‘தர்மபுரி மாவட்டத்தில், அரசு மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் சந்து கடைகள் உயர் அதிகாரி ஒருவரின் ஆசீர்வாதத்தால் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சந்துக்கடையில் மாமூல் வசூலிக்க 2 போலீசாரையும் அவர் நியமித்துள்ளார். ஏதோ காரணத்தால் நியமித்திருந்த அந்த 2 போலீசாரையும் சமீபத்தில் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். தற்போது புதியதாக நியமிக்கப்பட்ட 2 போலீசார், மேலதிகாரி பெயரை கூறி வசூல் வேட்டையை கன ஜோராக நடத்தி வருகின்றனராம். பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில்,  மது விற்பனை சூடுபிடித்துள்ளது. அதனால் மாமூல் வசூலிப்பில் 2 போலீசாரும் கறாராக உள்ளனராம். இதனால் சந்துக்கடைக்காரர்கள் அந்த 2 போலீசாரையும் பார்த்தால், ஆளை விட்டால் போதும் என்று ஓட்டம் பிடிக்கின்றனராம்... இதுவரை பல லகரங்களை அதிகாரிகளிடம் வசூல் ஆசாமிகள் கொடுத்துள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் தோல்வியால் தமிழக விவிஐபியே ஜல்லிக்கட்டு விளையாட்டை துவக்கி வைக்க தயக்கம் காட்டுகிறாராமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரை தலைமையிடமாக கொண்ட மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு இலை கட்சியின் தலைமைக்கு கடும் அதிர்ச்சி. 2 அமைச்சர்கள் முகாமிட்டும் மாவட்ட ஊராட்சியை கைப்பற்ற நடந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. கார், பல லட்சம் பரிசு பேரம் பேசியும் கவுன்சிலர்கள் யாரும் மசியவில்லையாம். ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரை  கைப்பற்ற மல்லுக்கட்டியும் முடியாமல் போனதுதான் பெரிய அதிர்ச்சியாக அமைச்சர்கள் நினைக்கிறார்களாம். அப்புறம் ‘வாடிவாசல்’ பெயர் சாயல் கொண்ட இன்னொரு ஒன்றிய தலைவர் இடத்துக்கு தேர்தலையே நடத்த முடியாமல் இழுபறியாக கிடக்கிறது. இந்த இரு ஒன்றியங்களுக்கும் ஒரு அமைச்சர் தான் மாவட்டச்செயலாளராகவும் இருக்கிறார்.

அங்கு இலை கட்சிக்கு சரிவு உண்டாக்கியுள்ள நிலையில், இன்னும் 5 நாளில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்த வீரவிளையாட்டை துவங்கி வைக்க சேலம் விவிஐபியை ஒரு அமைச்சர் அழைத்துள்ளாராம். அதே நேரத்தில் இன்னொரு அமைச்சர் சேலம் விவிஐபி வருவது உறுதி இல்லை என்று முரண்பட்டு சொல்கிறார். தேர்தலில் அலங்காநல்லூரில் படுதோல்வி கண்ட நிலையில் அங்கு சேலம் விவிஐபி வர தயக்கம் காட்டி வருகிறார் என்று இலை கட்சி வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக உள்ளது...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இரண்டு மாதத்தில் ஓய்வு பெற இருந்த சப்இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டது காவல் துறையை உலுக்கி இருக்கு போல...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கன்னியாகுமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் ஓரிரு மாதங்களில் ஓய்வுபெற இருந்தார். காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் திறம்பட பணியாற்றிய அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ெசக்போஸ்ட் பணி என்பது அண்டை மாநிலத்தின் வாகனங்கள் நுழைவையும், இங்கிருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களையும் கண்காணிக்கும் முக்கிய பணியாகும். போலீஸ் துறை என்றாலே கடினமான பணிதான் என்றாலும் ஓய்வுபெறும் நிலையில் உள்ள போலீசாருக்கு கடைசி ஓராண்டாவது இலகுவான பணியை ஒதுக்கலாமே. இதுபோன்ற செக்போஸ்ட் டூட்டி போடுவதன் மூலம் ஓய்வுபெறும் நிலையில் உள்ள போலீசாரின் மன அழுத்தம், பணி அழுத்தம் அதிகரிக்கிறது. எவ்வளவோ போலீசார் இளம் வயதில் தேர்வாகி ஆயுதப்படையில் இருக்கின்றனர். அவர்களை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தலாம் என்பது ஓய்வுபெறும் நிலையில் உள்ள போலீசாரின் கருத்து. எந்த பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் ஓய்வுபெறும் நிலையில் இருந்த ஒருவரை செக்போஸ்ட் டூட்டியில் அமர்த்தியதால்தான் ஒரு அதிகாரியை இழந்து விட்டோம் என ஆதங்கப்படுகின்றனர் ஒட்டுமொத்த போலீசாரும்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்