SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுயேச்சை கவுன்சிலர்கள் கடத்தலுக்கு துணைநின்ற காவல்துறை உயரதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-01-11@ 00:09:41

‘‘ஜால்ரா அடித்தே காரியத்தை சாதிக்கிறாராமே ஒரு காவல்துறை உயரதிகாரி...’’ என்று கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
 ‘‘கரூர் மாவட்ட காவல்துறையில் கும்மென்ற அரசன் பெயரைக்கொண்ட உயரதிகாரிதான் அவர்.  10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் ஜால்ரா தட்டியே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறாராம். சப்இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த அவர், பின்னர் இன்ஸ்பெக்டரானார். பதவி உயர்வு பெற்று டிஎஸ்பியாகி கரூர் மாவட்டத்துக்குள்ளேயே பணியாற்றி வருகிறாராம். கரூரில் பல சர்ச்சைகளில் சிக்கிய அந்த அரசன், கட்டப்பஞ்சாயத்து மற்றும் மணல் கடத்தல் என ஆளும் கட்சியினரோடு கைகோர்த்து செயல்பட்டு வருகிறாராம். 3 ஆண்டுகளாகி விட்டதால் வேறு மாவட்டத்திற்கு துாக்கி விடும் நிலை வந்தபோது கூட மீண்டும் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சப்டிவிசனிலே இருக்கும்படி பார்த்துக்கொண்டாராம். சமயம்பார்த்து மீண்டும் தனது விசுவாசத்தை உள்ளாட்சி தேர்தலில் காட்டி தனது இருப்பிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இம்முறை சுயேச்சை கவுன்சிலர்கள் கடத்தலை முன் நின்று நடத்தி முடித்துள்ளார் இந்த அரசன். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய சேர்மன் பதவிக்கு ஆளும்கட்சிக்கு ஒரு இடம் தேவை இருந்த நிலையில் பெண் கவுன்சிலரை, இலை கட்சி பிரமுகரின் காரிலேயே கடத்தி செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாராம். 10 வருடமாக எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் மனுசன் ஜால்ரா அடித்தே காரியத்தை சாதித்துக்கொள்கிறாரே என அவரால் பாதிக்கப்பட்ட காக்கிகள் புலம்புகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மணல் கடத்தலில் கல்லா கட்டுவதில் போட்டி நடக்கிறதாமே..’‘
‘‘வேலூர் பாலாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் டோக்கன் சிஸ்டத்தில் ரசீது போட்டு முறை வைத்து மணல் அள்ளிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெருமுகை தொடங்கி பள்ளிகொண்டா வரை பாலாற்றில் மணல் கணக்கின்றி சுரண்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கணக்கின்றி பல முறை மணல் அள்ளி செல்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் மாட்டு வண்டி ஒன்றுக்கு இவ்வளவு என ரேட் நிர்ணயிக்கப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறதாம். இதில் காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மட்டுமின்றி பத்திரிகை நிருபர்கள் என்ற பெயரில் டுபாக்கூர்களும் தங்களுக்கும் மாமூல் வெட்ட வேண்டும் என்று மல்லுக்கட்டுகிறார்களாம். அந்த வகையில் மட்டும் விரிஞ்சிபுரம், பொய்கை என இரண்டு இடங்களில் மட்டும் தாலுகா மற்றும் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு மாதம் ₹5 லட்சம் வரை வசூலாகிறதாம். இதில் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினரும் தனித்தனியாக லட்சக்கணக்கில் வருவாய் பார்த்து வருகிறார்களாம். அதனால் மாட்டு வண்டி உரிமையாளர்களும் ஏக குஷியில் சகட்டு மேனிக்கு பாலாற்றை கபளீகரம் செய்து வருகிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால் மணல் அள்ளப்படும் இடங்களில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் செல்லும் டுபாக்கூர்களுக்கு போலீசாரே சிபாரிசு செய்து மாமூல் வசூலித்து தருகிறார்களாம். அதனால் இப்போது மாட்டு வண்டி ஒன்றுக்கு மணல் ₹4 ஆயிரம் வரை விலை ஏறி விட்டதாம்’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘உள்ளாட்சி தேர்தலில் இலைக்கட்சிக்காக சந்திரமுகியாக மாறினாராமே ஒரு பெண் அதிகாரி’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘தேர்தல் சர்ச்சைக்கு பெயர் போன கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தலில் தில்லாலங்கடி வேலை நடந்திருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் அலுவலரான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் முழுசா சந்திரமுகியாக மாறியது போல் நடந்துக்கிட்டாராம்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளரை இலைக்கட்சிக்காக தோற்றதாக அறிவித்துள்ளார். இதே போல் காங்கிரஸ் வென்ற வார்டிலும் கூட ரிசல்ட்டை மாற்றி அதிமுக வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார். இதுபற்றி அவர், இலை கட்சி முக்கிய பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்திய வீடியோ ஒன்று வெளியானதால் அவரது குட்டு அம்பலமானது.
இது குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அடுக்கடுக்கான புகார் அளித்தது. ஆனால், உண்மை எதுவும் இல்லை என தேர்தல் ஆணையமும் தெரிவித்தது. இதில் இருந்து தப்பிய அந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மீது குளம் துார்வாரியதில் ஊழல் புகார், திட்ட அமலாக்க டெண்டரில் முறைகேடு என அடுக்கடுக்கான புகார்கள் தற்போது குவிந்த வண்ணமாக உள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.
  ‘‘தாசில்தார் அலுவலக மேட்டர் இருப்பதாக சொன்னாயே..’’
 ‘‘சொல்றேன்..கோவை மாநகரில் உ்ள்ள ஒரு தாசில்தார் அலுவலகத்தில் எப்போதும் கரன்சி மழைதான். இங்குள்ள தாசில்தார் எதிலும் சிக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். இதற்காகவே இரண்டு எடுபிடிகளை வைத்துள்ளார். சின்ன விஷயங்களை செய்துகொடுக்க ஒரு எடுபிடி, பெரிய காரியங்களை செய்துகொடுக்க இன்னொரு எடுபுடி. சான்றிதழ் விநியோகம் தொடர்பான பணிகளை சிறு எடுபிடி கவனித்துக்கொள்கிறது. லைசென்ஸ் புதுப்பித்தல் உள்ளிட்ட பெரிய காரியங்களை பெரிய எடுபிடி டீல் செய்கிறது. இந்த எடுபிடிகளின் ஆட்சிதான் தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது. இவர்களை மீறி யாரும் உள்ளே விண்ணப்பம் கொடுக்கவும் முடியாது, காரியம் சாதிக்கவும் முடியாது.
சினிமா தியேட்டர் லைசென்ஸ், மணல் குவாரி, கல் குவாரி லைசென்ஸ் என பெரிய காரியங்களில் அதிகளவு கரன்சி கொட்டுகிறது. எடுபிடிகளின் பின்னணியில் தாசில்தார் இயங்குவதற்கு காரணம் விஜிலென்ஸ் ரெய்டு பயம்தான். கையும், களவுமாக சிக்கிவிட்டால் எல்லாம் கெட்டுப்போய்விடும் என்பதால் ரொம்பவே உஷாராக இருக்கிறார். அடிச்சா இப்படித்தான் நூதனமா அடிக்கனும்... என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்