SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோத்தவங்களுக்கு பதவி பிரமாணம் செய்ததா குற்றச்சாட்டு வந்திருப்பதை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2020-01-09@ 00:18:34

‘‘தொடர் குற்றச்சாட்டால் சிக்கலில் சிக்கித் தவிக்கிறாங்களாமே தேர்தல் அதிகாரிகள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட் வந்ததுல இருந்து, வெற்றி அறிவிப்புல பல கோல்மால் நடந்ததா பல்வேறு மாவட்டங்கள்ல புகார் கிளம்பியிருக்கு. குறிப்பா, மாங்கனி மாவட்டத்துல தேர்தல் ரிசல்ட் தொடர்பா நாளொரு பிரச்னையா, புதுசு புதுசா கிளம்பிட்டு இருக்குது. அந்த வரிசையில ஓமலூர் பக்கமுள்ள ஒரு ஊராட்சியில 6 வார்டுல, தோல்வியடைஞ்சவங்களுக்கு பதவி பிரமாணம் செஞ்சுவச்சதா குற்றச்சாட்டு எழுந்திருக்கு. ஒட்டுமொத்தமா கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த வேட்பாளருங்க, முதல்நாள் நாங்க வெற்றிபெற்றதா இணையதளத்துல பதிவேற்றம் பண்ணுன தேர்தல் ஆணையம், அடுத்த நாளே வேறுசிலரு வெற்றிபெற்றதா மாத்தி பதிவு பண்ணிட்டாங்க. அதுமட்டுமில்லாம அவங்களுக்கு பதவி பிரமாணமும் செஞ்சு வச்சிருக்காங்க. ஆனா உண்மையிலயே ஜெயிச்ச நாங்க, இப்போ ஏமாந்து நிக்கறோம்னு கண்ணீர் வடிச்சாங்க. தினமும் இப்படி புகார் மேல புகாரா வருது, இதனால் அடுத்து என்ன சிக்கல் வருமோ என்று புலம்புறாங்களாம் அதிகாரிகள்’’ என்ற விக்கியானந்தா, ‘‘உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில், ஆளுங்கட்சியான அதிமுக  பல இடங்களில் பின்னுக்கு தள்ளப்பட்ட விவகாரம் தெரியுமா...’’ என்று மூச்சுவிடாமல் அடுத்த டாபிக்கிற்கு தாவினார்.
‘‘அப்படியா’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஆமா... ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்துல, இலை கட்சிக்காரர்கள் தேர்தல் முடிவால் கலங்கி போயிருக்காங்களாம்... காரணம், இங்கு திமுகவினர் அபார வெற்றி பெற்று, ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடித்து விட்டனர். ஆனால், இலை கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஆர்.கே.நகர்காரர் அணியினரே, கூடுதல்  கவுன்சிலர் பதவிகளை பிடித்து 2ம் இடத்ைத பிடிச்சுட்டாங்களாம்.... மூன்றாம் இடத்திற்கு இலைக்காரர்களை தள்ளி விட்டதால், கட்சியினரிடம் புலம்பல் அதிகரித்திருக்கிறதாம்... அதாவது, யூனியனில் உள்ள 14 கவுன்சிலர் பதவியில் திமுக 9 இடங்களையும், ஆர்.கே.நகர்காரர் அணி 3 இடங்களை பிடித்து 2ம் இடமும், 2 இடங்களை பிடித்து இலைக்கட்சி 3வது இடத்தையும் பிடித்துள்ளது. மொத்தத்தில் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் இலை கட்சி தேய்பிறை நிலவாகி விட்டதாக சொந்த கட்சியினரே புலம்புகின்றனர். முக்கியமாக இலைக்கட்சியின் ‘முக்கியப் பதவியில்’ இருப்பவரே, இந்த தேர்தலில்  தோல்வி அடைஞ்சிட்டாராம்... மாவட்டத்தில் ஏற்பட்ட சறுக்கலுக்கு மாசெ, மாஜி அமைச்சர், மாஜி எம்பி என மூன்று ‘தலைகள்’ தனித்தனி பிரிவாக செயல்பட்டதுதான் காரணம் என்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. எல்லாம் அந்த நோட்டு பண்ற வேலை....!

 ‘‘கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இதன் வளாகத்தில், உணவு பாதுகாப்பு துறைக்கு தனியாக அலுவலகம் உள்ளது. கோவை மாவட்ட சுகாதார துறையில் துணை இயக்குனராக ஒரு பெண் அதிகாரி உள்ளார். இவர், சுகாதார பணிகள் தொடர்பாக ஆய்வுசெய்ய எங்கும் செல்வதில்லை. அலுவலகத்துக்கும் சரிவர வருவதில்லை. மாவட்ட கலெக்டர் ஏதேனும் ஆய்வுக்கூட்டம் நடத்தினால், அப்போது மட்டும் ஆஜராகிறார். மற்ற நேரங்களில் எஸ்கேப் ஆகி விடுவதால், இந்த பெண் அதிகாரி, மாவட்டத்துக்குள் இருக்கிறாரா, இல்லையா என இத்துறை ஊழியர்களே கேள்வி எழுப்புகின்றனர். சில தனியார் மருத்துவமனைகள் மீது புகார் வந்தால், அது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது இவரது பணி. ஆனால், கண்டுகொள்வதில்லை. என்ன மந்திரமோ, மாயமோ தெரியவில்லை... என்கிறார்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது என தெரியாமல் இத்துறை ஊழியர்கள் திணறுகின்றனர். இதேபோல், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அதிக நேரம் வெளியில் சுற்றிவ௫வதையே வி௫ம்புவாராம். இவர் சுற்றி வருவது அரசுக்கு நல்ல பெயர் உருவாக்கி கொடுக்கவா இல்ல... அவர் நல்ல ெபயர் வாங்கவா என தெரியவில்லை. இதற்கு முன்பு இருந்த உணவு பாதுகாப்பு துறை பெண் அதிகாரியும் இப்படித்தான். எல்லாம் அந்த நோட்டு பண்ற வேலை என்கிறார்கள் இத்துறை ஊழியர்கள்’’.

‘‘உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் கோவில்பட்டி யூனியன் தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுதாமே..’’ ‘‘ஆமா..கோவில்பட்டி யூனியனில் மொத்தமுள்ள 19 வார்டுகளில் 8 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் இந்திய கம்யூ. கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் திமுக கூட்டணியில் 9 இடங்கள் உள்ளன. ஒரு கவுன்சிலரின் ஆதரவு இருந்தால் எளிதாக சேர்மன் பதவியை பிடித்து விடலாம். ஆனால் அதிமுகவிடம் 5 இடங்கள் மட்டுமே உள்ளன. கூட்டணி கட்சியான தேமுதிக ஒரு இடத்தில் வென்றுள்ளது. அந்த கூட்டணியிடம் 6 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் சேர்மன் பதவியை பிடிக்க 4 இடங்கள் தேவை. இந்நிலையில் இந்த யூனியனில் கவுன்சிலர்கள் பதவியேற்ற உடனே கவுன்சிலர்களை கடத்துவதாக அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாது சுயேட்சை கவுன்சிலர் மாயம் என அந்த பகுதியினரை தூண்டி விட்டு புகார் அளித்தனர். அதற்கு அந்த கவுன்சிலரோ, நான் எனது உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறேன். எங்கும் மாயமாகவில்லை என்று கூறிவிட்டார். இதனால் அதிமுகவினர் சுவற்றில் அடித்த பந்து போல் உறைந்து நிற்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • varaverppu stage20

  உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

 • america athipar2020

  காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

 • trumb12020

  இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

 • school20

  ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

 • jaya20

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்