SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீண்ட பேட்டரி திறன் கொண்ட அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!

2020-01-08@ 17:41:23

அமேஸ்ஃபிட் நிறுவனம் தனது டி ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை 2020 சி.இ.எஸ். விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல், 12 விதிமுறைகளை பூர்த்தி செய்யும் ராணுவ தரச்சான்று பெற்றுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம், GPS + GLONASS, தொடர்ச்சியாக 20 மணி நேரம் பயன்படுத்தும் வசதி, 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. 14 ஸ்போர்ட்ஸ் மோட் பயன்படுத்தும் வசதி கொண்ட புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வடிவமைப்பு, பயோடிராக்கர் பி.பி.ஜி., எந்நேரமும் இதய துடிப்பை டிராக் செய்யும் ஆப்டிக்கல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

அமேஸ்ஃபிட் டி ரெக்ஸ் சிறப்பம்சங்கள்:

- 1.3-இன்ச் 360x360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆண்ட்ராய்டு 5 மற்றும் ஐ.ஓ.எஸ். 10 தளங்களுடன் இயங்கும்
- ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் (PPG)
- 3-ஆக்சிஸ் அக்செல்லரேஷன் சென்சார், ஜியோமாக்னெடிக் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார்
- டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM)
- ப்ளூடூத் 5.0 எல்.இ., GPS+GLONASS
- MIL-STD 810G சான்று
- 19 ஸ்போர்ட்ஸ் மோட்
- 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி

அமேஸ்ஃபிட் டி ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், ஆஷ், கமோஃபிளேஜ், கிரீன் மற்றும் காக்கி நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 139.9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.10,070) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அமேஸ்ஃபிட் நிறுவனம் பிப் எஸ் மாடலை பல்வேறு நிறங்களால் ஆன ஸ்டிராப்களுடன் அறிமுகம் செய்துள்ளது. 30 கிராம் எடை கொண்டிருக்கும் இந்த சாதனத்தில் 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், 40 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

  • chinnaa_hospiitt1

    25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

  • vinveli_sathanaiiii1

    விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

  • landlide_floodd_11

    பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்