SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோபோ சீக்ரெட்ஸ்

2020-01-07@ 17:42:37

நன்றி குங்குமம் முத்தாரம்

மனித அறிவின் உச்சம் ரோபோ. இதைப் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம் மிகுந்துவை. அதில் சில துளிகள் இதோ...

* எந்திர மனிதனைக் குறிக்கும் ரோபோ (Robot) என்ற ஆங்கிலச் சொல், ‘அடிமை’ என்று பொருள்படும் ‘செக்’ மொழி வார்த்தையிலிருந்து பிறந்தது. காரல் கெப்பேக் என்பவர்செக் மொழி நாடகாசிரியர், நாவலா சிரியர் மற்றும் பத்திரிகையாளர். இவர் 1921ல் R.U.R.(Rossum’s Universal Robots) என்ற நாடகத்தில் ‘ரோபோ’ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.

* மனிதர்களால் காலங்காலமாகச் செய்யப்படும் கடின வேலைகளைச் செய்வதற்காக குறிப்பிட்ட சில எந்திரங்களை பயன்படுத்துதல் எந்திர மனித இயல் (Robotics) என அழைக்கப் படுகிறது.

ஐசக் அசிமோவ் என்ற ரஷ்யாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானக் கதைகளின் நூலாசிரியர், எந்திர மனித இயல் என்ற சொல்லை முதன்முதலில் 1940களில் பயன்படுத்தி னார். அசிமோவ் 300க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

* பண்டைக் காலத்தில் சீனா, கிரீஸ், எகிப்து ஆகிய நாடுகளில் மனித உருவிலும், மிருகங்கள் மற்றும் பறவை வடி விலும், இயந்திரவியல் கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கும் எந்திர பொம்மைகள் இருந்தன. கிரேக்க நெருப்புக் கடவுள் ஹெபாய்ட்டஸ் தனக்கு உதவி செய்ய ரோபோ போன்ற
உருவங்களை உருவாக்கியதாக கிரேக்க புராணங்கள் சொல் கின்றன.

* இத்தாலிய ஓவியர் லிய னார்டோ டாவின்சி 1495-ல் ஒரு ரோபோவைக் கண்டுபிடித்தார். 1928ல் ERIC என்ற ரோபோவை டபிள்யூ எச்.ரிச்சர்ட்ஸ் என்பவர் லண்டனில் சொசைட்டி ஆப் மாடல் எஞ்சினியர்ஸில் முதன்முத லில் காட்சிக்கு வைத்தார்.

1939 மற்றும் 1940ல் நடந்த உலகக் கண்காட்சிகளில் வெஸ்டிங்ஹவுஸ் எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் Electro என்ற ரோபோவைக் காட்சிக்கு வைத்தது. 1940களில் William Grey Walter என்பவர் Elmer, Elsie ஆகிய ரோபோக்களை வடிவமைத்தார்.

*1954ல் George Devol என்பவர் Unimate என்ற ஒரு இயந்திரக் கையைக் கண்டுபிடித்தார். இந்த ரோபோ 1961ல் அமெரிக்கக் கார் தொழிற்சாலை ஒன்றில் பயன்பாட்டுக்கு வந்தது. 1960களில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது.

*1973ல் ேடாக்கியோவில் உள்ள Waseda பல்கலைக்கழகம் Wabot-1 என்ற முழுமையான ரோபோவை உருவாக்கியது. இந்த ரோபோ இரண்டடி தூரம் நடக்கும் ஆற்றலையும் ஜப்பானிய மொழியில் ஒருவரிடம் பேசக் கூடிய திறனையும் பெற்றிருந்தது.

*ஹோண்டா நிறுவனம் தயாரித்த Asimo என்ற ரோபோ பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. நகராதவை, நகரக்கூடியவை என ரோபோக்களில் இருவகை உண்டு. ரோபோவில் Controller, ARM, Drive, End Effector மற்றும் Sensor என ஐந்து முக்கிய பாகங்கள் உண்டு. ஒவ்வொரு ரோபோவிலும் கணினி ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.

ரோபோக்களை உருவாக்குவதில் ஜப்பானியர்கள் முதலிடத்தை வகிக்கின்றனர். அவர்கள் இத்துறையில் அமெரிக்கர்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறி விட்டனர். உலகிலுள்ள பத்து லட்சம்  தொழிற்சாலை  ரோபோக் களில் பாதியளவு ஜப்பானில் தான் உள்ளன.

*ஒரு ஆகாய விமானத்தை சுத்தம் செய்ய 12 மணி நேரம் தேவைப்படும். Sky Wash என்ற ரோபோ இப்பணியை மூன்று மணி நேரத்தில் முடித்துவிடும். ஜப்பானில் நடனமாடும் ரோபோக்கள் உண்டு. ரோபோவின் நினைவில்பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகளின் படி இது நடனமாடும். பதிவு செய்யப்படாத புதிய அசைவுக ளோடு இதற்கு நடனமாடத் ெதரியாது.இன்று ரோபோ தயாரிப்புத் தொழில் பெரும் அளவில் வளர்ந்துள்ளது.

க.ரவீந்திரன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்