SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் சேனல்: பணம் பறிக்கும் பலே கில்லாடி

2020-01-05@ 05:23:39

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் கிரைம் பிரிவில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பணிபுரிகிறார். இவர், காவல்நிலையத்துக்கு வரும் புகார்தாரர்களிடம் பணம் பறிப்பதில் படு கில்லாடியாக உள்ளார். சமீபத்தில் போத்தனூர் பகுதியில் இருந்து பொள்ளாச்சிக்கு வாடகைக்கு கார் எடுத்துச்சென்ற ஒரு கும்பல், டிரைவரை தாக்கி, காரை கடத்திச்சென்றுவிட்டது. அத்துடன், அந்த காரை, வேறு ஒரு பார்ட்டிக்கு விற்று பணம் சம்பாதித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டது. காரை பறிகொடுத்த டிரைவர்,  போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, இந்த சப்-இன்ஸ்பெக்டர்தான் கேஸை டீல் செய்துள்ளார். ரொம்ப டீப்பாக விசாரிச்சு, பலன் அனுபவிச்ச காரணத்தால் புகார்தாரர் ஏமாந்துபோய்விட்டார். அத்துடன், ‘‘இதுமாதிரியெல்லாம் இனி புகார் கொடுக்க வரக்கூடாது. அப்படியே வந்தாலும், இருதரப்பும் சேர்ந்துதான் வரனும்’’... என கிளாஸ் எடுத்து அனுப்பிவிட்டார். இதனால், புகார் கொடுத்த கால் டாக்ஸி டிரைவர் நொந்து, நூலாகி விட்டார். இந்த சப்-இன்ஸ்பெக்டர் இதேபோல், ஓன் போர்டு வெகிக்கிள் பயன்படுத்தி, வாடகைக்கு கார் ஓட்டும் நபர்களை கண்காணித்து, அவர்களிடமும் சப்தம் இல்லாமல் மாதம்தோறும் சில்லரை தட்டிவிடுகிறார். இப்படி பல கில்லாடி வேலைகளில் இறங்கி காசு பார்ப்பதால், உளவுப்பிரிவு பார்வை இவர் மீது விழுந்துள்ளது.

மாடு பிடிக்கும் உத்தரவால் ‘மண்டை காயும்’ போலீஸ்:
திண்டுக்கல் சரக டிஐஜி அலுவலகத்திலிருந்து நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு இடப்பட்டுள்ள உத்தரவு, அவர்களை கலக்கத்துக்கு ஆளாக்கி இருக்கிறது. அதாவது, ரோடுகளில் சுற்றித்திரிகிற மாடுகளை பிடித்துக் கட்டவேண்டும். இதனை செயல்படுத்தாமல் விட்டு, எங்காவது ரோடுகளில் மாடுகள் சுற்றித் திரிவதைக் கண்டால் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் நெடுஞ்சாலைத்துறை போலீசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாய்மொழி உத்தரவால், திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசார், மாட்டைப் பிடித்துக் கொண்டு விவசாயி சென்றால்கூட, விடாமல் துரத்திச் சென்று ‘‘சீக்கிரம் நடையைக் கட்டுங்க... ரோட்டுல எந்த மாட்டையும் பார்க்கக் கூடாது’’ என்று விரட்டியடிக்கிறார்களாம். மாடுகளை வீதிகளில் விடும் மாட்டின் உரிமையாளருக்கு தண்டனை கொடுக்காமல், போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதால், போலீசார் கடும் கலக்கத்தோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறார்களாம்.

டுபாக்கூர் நிருபரை வைத்து பேரம் பேசி கல்லா கட்டும்‘திரி ஸ்டார்’:
ஆரணியில் முழுமுதற் கடவுளின் பெயரை கொண்ட திரி ஸ்டார் அதிகாரி, ஒரே இடத்தில் 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாராம். இவர் சமூக விரோத கும்பலுடன் தொடர்பு வைத்து கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது மட்டுமின்றி ஆதரவும் கொடுத்து கலெக்‌ஷனில் கலக்கி வருகிறாராம். குறிப்பாக ஆரணி வட்டாரத்தில் காட்டன், மணல் கடத்தல், கஞ்சா விற்பனை போன்ற தொழில்களை செய்பவர்களிடம் டுபாக்கூர் நிருபர் ஒருவரை வைத்து பேரம் பேசி முடிக்கிறாராம். மணல் திருட்டில் ஈடுபடுபவர்களின் லாரியை பிடித்து 1 லட்சம் கொடுத்தால் தான் வண்டியை விடுவிக்கிறாராம். அதேபோல் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 3 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்து வரும் 18 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஆரணி திரி ஸ்டாருக்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தும் விதிவிலக்காம்.

இதற்கு காரணம் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்புதானாம். இதனால் ஆரணியில் காட்டன், மணல், கஞ்சா, சாராயம், பிளாக்கில் மது விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என மாதம் ₹10 லட்சம் வரை கல்லா கட்டி வருகிறாராம். சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை மிரட்டியே சொந்த ஊரான வேலூர் சத்துவாச்சாரியில் 5 கோடியில் மிகப்பெரிய வீடு கட்டி வருகிறாராம். அதேபோல் உள்ளூர் அமைச்சரின் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அமைச்சரின் முழு ஆதரவும் அவருக்கு உள்ளதாம். அதனால் அவர் செய்யும் தவறுகள் குறித்து உயர்அதிகாரிகளும் கண்டும் காணாமல் போய்விடுகிறார்களாம்.


சைரன் போட்டு கலெக்‌ஷன் அள்ளும் ரோந்து போலீசார்
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து மற்றும் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் ரோந்து போலீசார் சைரன் போட்டு சைலன்ட்டாக கலெக்‌ஷன் செய்து வருகின்றனர். வாலாஜா வி.சி மோட்டூர், ஆற்காடு, விஷாரம், ரத்தினகிரி உள்ளிட்ட இடங்களில் ரோந்து வாகனம் மூலமாக கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக வாலாஜா, ராணிப்பேட்டை, சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு வரும் லாரிகளை ரோந்து போலீசார் வழிமறிக்கின்றனர். அதிகபாரம், எப்சி பார், இன்சூரன்ஸ் இல்லை என ஏதாவது ஒரு காரணத்தை கூறி வழக்கு பதியாமல் டிரைவர்களிடம் இருந்து பணத்தை கறந்துவிடுவது வழக்கமானது. இந்நிலையில், ரோந்து போலீசார் வசூல் வேட்டைக்கு புதிய ரூட் போட்டு கல்லா கட்டி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையை கடந்து நகருக்குள் நுழையும் லாரிகளை கண்டதும் ரோந்து போலீசார் தங்களது வண்டியில் உள்ள சைரனை ஒலிக்கவிடுகின்றனர். ஒருமுறை மட்டும் ஒலித்துவிட்டு நிறுத்தி விடுகின்றனர். இதனை கண்டுகொள்ளும் லாரி டிரைவர்கள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்று 100 கொடுத்துவிட்டு செல்கின்றனர். சைரன் கலெக்‌ஷன் சிஸ்டத்திற்கு நல்ல கலெக்‌ஷன் கிடைப்பதால் ரோந்து போலீசார் பழைய நடவடிக்கைகளை கைவிட்டு சைரன் சிஸ்டத்திற்கு மாறி கலெக்‌ஷனை அள்ளுகின்றார்களாம்.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்