SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் சேனல்: புரோக்கரை பார்.... காசு வருது ஜோர்..!

2020-01-05@ 05:20:50

ஈரோடு மாவட்ட காவல்துறையில் பிரிட்டீஸ் இளவரசர் பெயர்கொண்ட ஒரு உயரதிகாரி பணியாற்றுகிறார். இவர், தனது டூட்டியில் சின்சியராக இருப்பதாக காட்டிக்கொண்டு மோசடி புகார்களில், புரோக்கரை நியமித்து வசூல்வேட்டையை நடத்தி வருகிறார். இவருக்கு புரோக்கராக, வெண்ணிற ஆடையை அடைமொழியாக கொண்ட நடிகரின் பெயரை கொண்ட ஒரு நபர் இருந்து வருகிறார். மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நில மோசடி, பணம் மோசடி, நிதி நிறுவன மோசடி என பல மோசடி புகார்கள் வந்தால், உடனடியாக இந்த அதிகாரி கவனத்துக்கு செல்கிறது. உடனே இந்த அதிகாரி, புரோக்கருக்கு தகவல் சொல்லி, வரவழைக்கிறார். அவர், டீல் செய்து, 10 சதவீதம், 15 சதவீதம் என பேரம் பேசி அசத்துகிறார். இப்படி அடிக்கடி டீல் பேசி, பணம் பறிக்கும் அந்த உயரதிகாரி மீது மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரு கண் வைத்துள்ளதாகவும், அதிகாரியுடன் சேர்ந்து புரோக்கரும் விரைவில் சிக்குவார் என சக காக்கிகள் உறுதியாக கூறுகிறார்கள்.

டாஸ்மாக் பார் ஓனர் ஓவர் சவுண்டு:
இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு 5 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை விடப்பட்டது. இதில் ஒரு சில குடிமகன்கள் சரக்குகளை முன்கூட்டியே வாங்கி ஸ்டாக் வைத்தனர். ஒரு சிலர் எப்படியும் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை செய்யப்படும் அப்போது வாங்கி கொள்ளலாம் என அமைதியாகினர்.இதில் காந்திமார்க்கெட் - பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்றங்கரையோர பகுதியில் மறைந்த நடிகர் வீட்டின் பின்புறம் உள்ள கல்லறைக்கு நேர் எதிரே உள்ள டாஸ்மாக்கில் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடந்தது. அங்குள்ள கல்லறையில் ஒவ்வொரு கல்லறையிலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து மதுபாட்டில்களுக்கு ஏற்றவாறு 50 முதல் 100 வரை கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டது.

கள்ளத்தனமாக நடந்த மதுவிற்பனையை மருந்துக்குகூட மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் ஏன் என கேள்வி கேட்கவில்லை. மாறாக அதிரடி ரெய்டும் நடத்தவில்லை. ஒருசில குடிமகன்கள் இவ்வளவு விலையா என கேள்வி கேட்டபோது, போலீசுக்கு கொடுத்த மாமூலை எப்படி எடுப்பது, அவர்களே கம்முன்னு உள்ளனர். போய்யா போ என ஏகத்திற்கும் வசனம் பேசிய பார் உரிமையாளர் க்யூவில் வாங்க என கயிறு கட்டி வைத்து விற்பனை செய்தாராம்.

குமரியில் ‘பவுர்புல்’ தனிப்பிரிவு ஏட்டு
குமரி மாவட்டத்தில் அரண்மனை நகர பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஒருவர், தனது உறவினரின் மணல் கடத்தலுக்கு துணைபோவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தனிப்பிரிவு ஏட்டுகளையும் இடமாற்றம் செய்து எஸ்.பி நாத் உத்தரவிட்டார். அந்த தனிப்பிரிவு ஏட்டு மலையோர பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் புதிய காவல் நிலைய பகுதிக்கு செல்லவில்லை. மாறாக விட்ட இடத்தை உடனே மீண்டும் பிடிக்க காய்களை நகர்த்த தொடங்கினார். அதற்காக ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகளை சந்தித்து எப்படியாவது அரண்மனை நகர பகுதி காவல் நிலையத்திற்கே மீண்டும் வந்துவிட முயற்சித்தார். அவரது முயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது. மீண்டும் அதே காவல் நிலையத்தில் ஒரே வாரத்தில் பணியில் சேர்ந்துவிட்டாராம். இப்படி தனிப்பிரிவு ஏட்டுகள் சிலர் ‘பவர்புல்’ ஏட்டுகளாக மாவட்டத்தில் வலம் வருகின்றனர் என்று மற்ற காக்கிகள் புலம்புகின்றனர். அவர்கள் நினைத்ததை சாதித்து விடுவதால், உயர் அதிகாரிகளே இவர்களை பார்த்து பயப்படுகின்றனராம்.

உற்சாகத்தில் உளவுப்பிரிவு கட்டப்பஞ்சாயத்து..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் பல ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 17ம் தேதி உடுமலை குட்டைத்திடலில், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, பெருமளவில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பல ஆயிரம் பேர் திரண்டதால் காவல்துறையினரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. உடுமலை நகர உளவுப்பிரிவு போலீசாரின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணம். போராட்டத்துக்கு எவ்வளவு விவசாயிகள் வருவார்கள் என அவர்களால் கணிக்க முடியவில்லை. மேலிடத்துக்கு உறுதியான தகவல் எதுவும் சொல்ல முடியவில்லை. அதனால் வந்த வினை இது. விவசாயிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதற்கு, உடுமலை உளவுத்துறையின் மந்தமான செயல்பாடுதான் காரணம் என திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு புகார் அனுப்பிவிட்டார்.

அத்துடன், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு? இப்படியா பொறுப்பற்று நடந்துகொள்வது? என உளவுப்பிரிவு போலீசாரை வறுத்தெடுத்து விட்டார். ஏன் இந்த மந்த நிலை..? என விசாரித்தபோது, உடுமலை காவல்நிலையத்துக்கு வரும் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டு, உளவுப்பிரிவினர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதும், கரன்சி நோட்டுகளை எண்ணுவதும் என தெரியவந்தது. இந்த விவகாரத்தில், சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கும், உளவுப்பிரிவு போலீசாருக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், விரைவில் ‘’களை’’யெடுப்பு நடக்கும் என்கிறார்கள் எஸ்.பி., அலுவலக அதிகாரிகள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்