SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய ஸ்கோடா கமிக் அறிமுகம்

2020-01-05@ 05:18:10

ஸ்கோடா நிறுவனம் பல புதிய எஸ்யூவி ரக கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில், கரோக் எஸ்யூவி ரக கார், 2020 ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மற்றொரு காம்பேக்ட் எஸ்யூவி ரக மாடல் அறிமுகம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு இணையான ரகத்தில் ‘கமிக்’’ என்ற எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இப்புதிய கார், வரும் 2021ம் ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என ஸ்கோடா இந்தியா நிறுவன தலைமை அதிகாரி ஸேக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ளார். இப்புதிய கார், எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற புதிய கட்டமைப்பு கொள்கையில் உருவாக்கப்பட இருக்கிறது. ஹூண்டாய் கிரெட்டா ரகத்தில் 4.2 மீட்டர் முதல் 4.3 மீட்டர் நீளம் கொண்டதாக வருகிறது. வெளிநாட்டு மாடலைவிட இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கமிக் காரின் வீல் பேஸ் சற்று கூடுதலாக இருக்கும் என தெரிகிறது. இதனால், பின்புற இருக்கையில் அமரும் பயணிகளுக்கு அதிக இடவசதி ஏற்படும் வாய்ப்புள்ளது.

இப்புதிய காரில், 8.0 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பனோரமிக் சன்ரூப், ஆம்பியன்ட் கேபின் லைட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெறுகிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகிறது. இந்த காரில் சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் மாடலையும் அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. 2020 பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரின் கான்செப்ட் மாடல் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த கார், வடிவமைப்பிலும், வசதிகளிலும் சிறப்பானது என்பதுடன் ஸ்கோடாவின் தோதான பட்ஜெட் விலையிலான எஸ்யூவி மாடலாக வர இருப்பதால் அதிக வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்