SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளறுபடி ஏன்?

2020-01-05@ 01:20:46

தமிழக அரசு நிர்வாகத்தில் சிறப்பாக செயல்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு விருது வழங்கி கவுரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழக பொதுப் பணித்துறையில் பணியாளர் நியமனத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதை தவிர்த்து இருக்கலாம். அப்படி செய்யாததால், இந்த விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்றுதான் முடியும் என்று தெரிகிறது. இது சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு இல்லை. நிர்வாக குளறுபடிக்கு எடுத்துக்காட்டு என்றுதான் சொல்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களாக நீர்வளப்பிரிவில் 4,560 பேரும், கட்டுமான பிரிவில் 2,550 பேரும் நியமனம் செய்ய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், பொதுப்பணித்துறையில் எழுத்தர், தட்டச்சர், துப்புரவு பணியாளர், காவலர், அலுவலக உதவியாளர், டிரைவர், லஸ்கர் என 4,567 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது.

தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவு என்றும் அரசு ஊழியர்களுக்கு சமமாக ஊதியம் வழங்க வேண்டும என்று கோரிக்கை வைத்தனர். இதன் பின்னர், தற்காலிக ஊழியர்களில் இருந்து தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்க அரசு குழு நியமித்தது. அந்த குழு 3,047 பேர் கொண்ட பட்டியலை அரசிடம் சமர்ப்பித்தது. அதன்பேரில் பட்டியலில் இடம்பெற்ற ஊழியர்களின் பணி வரைமுறைப்படுத்தப்பட்டு புதிய அரசு ஆணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின்படி இவர்களுக்கு மாதம் தலா ரூ.18 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது, புதிதாக தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்ய திடீரென பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே, தற்காலிகமாக 7,110 பேரை நியமிக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், 4,567 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

எஞ்சிய 1,520 ஊழியர்கள் தற்காலிக அடிப்படையிலேயே பணியாற்றுவார்கள். தங்களுடன் பணிபுரிந்த ஒரு பிரிவினருக்கு மட்டும் ஊதிய உயர்வு அளித்துவிட்டு தங்களுக்கு வழங்காமல் இருப்பது அவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் நீதிமன்றம் செல்லக்கூடும் என்கின்றனர் பொதுப்பணித்துறை வட்டாரங்கள். இந்த குளறுபடி தேவையா? தற்காலிகமாக பணிக்கு எடுக்கும்போதே அவர்களின் தகுதி, அனுபவம் பார்த்துதானே அதிகாரிகள் எடுக்கின்றனர். பின்னர் பணி வரன்முறையில் மட்டும் மீண்டும் தங்களுக்கு வேண்டியதை, ‘தள்ளிய’ ஊழியர்களை மட்டும் தேர்வு செய்வதுதான் நியாயமற்ற செயல் என்கின்றனர் வரன்முறை படுத்தப்படாத ஊழியர்கள். இந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்