SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவணம் வேண்டாம்

2020-01-04@ 06:53:09

தேசிய குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளது. போராட்டக்காரர்கள் அனைவரும் எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்பட்டவர்கள். இந்தியாவில் வசிக்கும் யாருக்கும் இச்சட்டத்தால் பாதிப்பில்ைல. அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை கண்டுபிடித்து வெளியேற்றவே குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு விளக்கமளித்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதற்கிடையில் தமிழக பேரவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலிப்பதை தொடர்ந்து மத்திய பாஜ அரசு மற்றும் அதற்கு ஆதரவு கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர். மேலும் 10 நாட்களில் 3 கோடி குடும்பங்களை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு திரட்ட களமிறங்கியுள்ளது. இலவச தொலைபேசி எண் அளித்து மிஸ்டு கால் மூலம் ஆதரவை திரட்டவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்கிடையில், தேசிய மக்கள் தொகை பதிவுக்கான கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் எந்த ஆவணங்களையும் அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. ஒரு நபர் ஓர் இடத்தில் ஆறு மாதமோ அதற்கு மேலோ வசித்தாலோ, அடுத்த ஆறு மாதத்துக்கு வசிக்க இருந்தாலோ அவர் வழக்கமான குடிமகனாக கருதப்பட்டு என்பிஆர் பட்டியலில் தகவல்கள் சேகரிக்கப்படும்.

இதற்கான கணக்கெடுப்பு ஏப்ரல் முதல் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கணக்கெடுப்பில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தகவல்களை பெற இருக்கிறார்கள். ஆதார், ஓட்டுநர் உரிமம், பான் எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டும், பெற்றோர் பெயர், பிறந்த இடம் உள்ளிட்ட 21 தகவல்களை வழங்க வேண்டும் என்று செய்திகள் பரவியதால் மக்கள் அதர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். ஆனால், கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் பொதுமக்கள் எந்த ஆவணங்களையும் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. வாய்மொழியாக தரும் தகவல்களை அவர் அப்படியே பதிவு செய்து கொள்வார் என்று உள்துறை அமைச்சகம் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இருந்தாலும் கணக்கெடுப்பு நடக்கும் போது சொந்த நாடு, எத்தனை ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கிறீர்கள், தாய், தந்தை இந்திய குடிமக்களா போன்ற தகவல்களும் சேகரிக்கப்படும் என்று செய்திகள் வலம் வருவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்