SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிறந்தநாள் : இன்னிசை மழையில் நனைத்த ‘எம்எஸ்ஜி’

2020-01-03@ 13:21:03

இசையை பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட இசையில்தான் சிறந்து விளங்குவார். ஒரு சிலரே அனைத்தையும் கற்று ஜாம்பவனாக விளங்குவர். அவர்களில் ஒருவர்தான் பிரபல வயலின் வித்வான் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் வாசிக்கத் துவங்கினாலே அரங்கத்தில் அப்படி ஒரு அமைதி நிலவுமாம். தனி இசை வயலின் கச்சேரிகளிலும் தனி முத்திரை பதித்தவர். பொதுவாக, தனி வயலின் இசையை யாரும் ரசிக்க மாட்டார்கள். ஆனால், இவர், குன்னக்குடி வைத்யநாதன் உள்ளிட்டோர், இதில் தனி முத்திரை பதித்தவர்கள் எனக்கூறலாம். எம்எஸ்ஜி என அனைவராலும் அழைக்கப்படும் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரண்டிலும் சிறந்து விளங்கினார்.
்அவரைப்பற்றி தெரிந்து கொள்வோம்...

எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1931ம் ஆண்டு, ஜூன் 10ம் தேதி, பிரபல வயலின் இசைக்கலைஞரான பரூர் சுந்தரம் ஐயருக்கு மகனாக பிறந்தார். சென்னை மயிலாப்பூரில் பிறந்த இவர் இளம் வயதிலேயே வயலின் இசை மீது நாட்டம் கொண்டவராக இருந்தார். இதனால் தந்தையே இவருக்கு முதல் குருவாக திகழ்ந்தார். பள்ளிக்கூடம் செல்லும் 6 வயதில், இவர் வயலின் இசைப்பயிற்சியை தந்தையிடம் கற்க துவங்கினார். இவரது அண்ணனான எம்.எஸ்.அனந்தராமனும் தம்பியுடன் சேர்ந்து வயலின் இசையை கற்கத்தொடங்கினார். தினந்தோறும் அதிகாலை இவர்களது சங்கீத பயணம் துவங்கும். தந்தையிடம் இருவரும் கர்நாடக இசை, இந்துஸ்தானி இசையை கற்றுக்கொண்டனர்.

இவரது முதல் அரங்கேற்றம் ஆன வயது தெரியுமா? 8 வயதுதான்... நாம் கற்றது மட்டும் போதாது என எண்ணத்தொடங்கிய எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்கு செல்லத்துவங்கினார். வானொலி மூலம் இசையை கேட்டு அதையும் பல புதிய விஷயங்களை தெரிந்து கொள்வார். ஆரம்ப காலத்தில் பிரபல பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், ஆலந்தூர் சகோதரர்கள், பல்லடம் சஞ்சீவ ராவ் என அந்தக் காலத்தின் முன்னணிப் பாடகர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்துள்ளார்.

லால்குடி ஜி.ஜெயராமன், டி.என்.கிருஷ்ணன் ஆகிய இசை மேதைகளின் சமகாலத்தவரான இவர், கர்னாடக இசை உலகில் தனக்கென்று தனி இடம் பிடித்தார். பாடுபவரின் மனநிலை, பாடலின் சூழல், பார்வையாளர்களின் மனநிலையை புரிந்து அதற்கேற்ற முறையில் வயலின் வாசிப்பதில் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் கைதேர்ந்தவர். இரண்டுவிதமான இசையையும் வெளிப்படுத்தி, இன்னிசை மழையில் நனைய வைத்தவர் எம்எஸ்ஜி. பக்க வாத்தியமாக மட்டுமின்றி, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளுக்கு சென்று, தனி வயலின் இசைக்கச்சேரிகளை நடத்தி உள்ளார். சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது இசைப்பயணம் தொடர்ந்தது.

சிறந்த குரு - சிஷ்ய பரம்பரையை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தந்தையிடம் எம்எஸ்ஜி வயலின் இசை கற்றுக் கொண்டதுபோல, இவரது மகளான நர்மதாவும் தந்தையிடம் வயலின் இசை கற்றுக் கொண்டார். பின்னர் சிறந்த வயலின் கலைஞராக பல்வேறு கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், பத்மபூஷண், பத்ம, கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கேரள சங்கீத நாடக அகாடமி விருது, டி.சவுடையா விருது, வயலின் வாத்திய சாம்ராட், வயலின் வாத்தியச் சக்ரவர்த்தி, சப்தகிரி சங்கீத வித்வமணி உட்பட பல விருதுகளையும் எம்எஸ்ஜி  பெற்றுள்ளார். இரண்டுவிதமான இசையில் ஒரு சாதனையாளராக விளங்கிய எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஜன.3, 2013ம் ஆண்டு தனது 82வது வயதில் காலமானார். அவர் மறைந்தாலும், அவரது வயலின் இசை நம் காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • varaverppu stage20

  உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

 • america athipar2020

  காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

 • trumb12020

  இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

 • school20

  ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

 • jaya20

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்