SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விலைவாசி உயர்வு

2020-01-03@ 03:22:45

சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு புறம் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்க, மறுபுறம் விலைவாசி உயர்வு உச்சத்தை நோக்கிச்சென்று கொண்டு இருக்கிறது. புத்தாண்டில் முதல் இடியாக ரயில் கட்டணமும், அதை தொடர்ந்து காஸ் விலையும் உயர்ந்து இருக்கிறது. அதைப்போல் அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணைத்தொடும் அளவு உயர்ந்து வருகிறது. எதையும் கட்டுப்படுத்த முடியாமல் போராட்டங்களின் மத்தியில் குளிர்காய்ந்து வருகிறது மத்திய அரசு.வெள்ளையர்கள் நமது வளங்களை கொள்ளையடித்துச்சென்ற பிறகு சுதந்திர இந்தியாவில் மிஞ்சியது இயற்கை வளங்களும், பசியும் பட்டினியும் தான். ஆனால் உறுதியான இந்திய மக்களின் தன்னம்பிக்கையும், உழைப்பும் மீண்டும் ஒவ்வொரு அடியாக இந்தியாவை கட்டமைத்தது. ஊழல்களும், அரசாங்கத்தில் இருந்த அரசியல்வாதிகளின் முடிவுகளும் சில சமயங்களில் நமது வளர்ச்சியை தடுத்து நிறுத்தினாலும், ஒருபோதும் நமது அடிப்படை கட்டமைப்பை குலைத்துப்போட்டது இல்லை. இப்போது அத்தனையும் சீட்டுக்கட்டாய் சரிந்துவிடும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

ஊழல் புகாரை விட விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை என்று மன்மோகன்சிங் அரசுக்கு எதிராக வீதிதோறும் முன்னெடுத்த போராட்டம்தான் 2014ல் பா.ஜவை ஆட்சிப்பொறுப்புக்கு கொண்டு போய் சேர்த்தது. ஆனால் இன்று பா.ஜ போராடிய பணவீக்கம் பெரிதாய் வெடிக்கும் அளவுக்கு வந்து நிற்கிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும்  ஏறிக்கொண்டே செல்கிறது. சமையல்காஸ் விலை கடந்த 5 மாதத்தில் மட்டும் 143.50 ஆக உயர்ந்து இருக்கிறது. காய்கறி விலையைப்பற்றி கேட்கவே வேண்டாம். இந்தியா விவசாய நாடு. ஆனால் வெங்காயம் மட்டுமல்ல இனி ஒவ்வொரு விளைபொருட்களையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற பீதி ஏற்பட்டு இருக்கிறது. விவசாய பூமி அழிந்து ெகாண்டே வருகிறது. பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை இரண்டு மடங்கு உயர்ந்து நிற்கிறது. எதையும் தடுக்க முடியவில்லை. வங்கி கட்டமைப்பு உருக்குலைந்து விட்டது.

வராக்கடன் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. மூடப்படும் ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தள்ளாட்டம் போடுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் பெருநிறுவனங்களுக்கு அடிமாட்டுவிலையில் விற்கப்படுகின்றன. ரயில்களை கூட இயக்குவதற்கு தனியார்கள் ஏலம் எடுக்கிறார்கள். விமானநிலையங்களும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சென்று கொண்டு இருக்கிறது.ஆனால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் இவை அத்தனையும் மறைந்து போய் நிற்கிறது. மெல்ல மெல்ல வீட்டுச்செலவு அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வு நிச்சயம் விஷம் போன்றது. ஆரம்பத்திலேயே மருந்து கொடுத்தால் கட்டுப்படுத்திவிடலாம். கவனிக்கத்தவறினால் நிச்சயம் அபாயமானது. இப்போதைய நிலை அப்படித்தான். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதித்துவிடும். தடுக்க வேண்டியது அரசுகளின் கடமை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்