SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தையும் கவனிக்கலாமே

2020-01-02@ 06:22:51

அபுத்தாண்டு கொண்டாட்டத்தில் நாடே மூழ்கியிருக்க, திடீரென ரயில் டிக்கெட் உயர்வை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் பிரதான காரணமாக கூறப்படுவது நிதி சிக்கல்தான். ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குகிறது என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. வருவாய் வந்தாலும் செலவுக்கே ஏராளமாக போய்விடுகிறது. இதனால் உபரியாக எதுவும் மிஞ்சவில்லை. 2015-16 நிதியாண்டில் ரயில்வேயின் இயக்க செலவு விகிதம் 90 சதவீதமாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 96.2 சதவீதமாக ஆகியுள்ளது. அதாவது நூறு ரூபாய் சம்பாதிக்க 96 ரூபாய்க்கு மேல் செலவாகி விடுகிறது என தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், நடப்பு நிதியாண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை இந்த விகிதம் 123 சதவீதமாக உயர்ந்து விட்டது. வரவு எட்டணா செலவு பத்தணா கதைதான்.

இதனால்தான் சம்பள செலவு ஆரம்பித்து எல்லா செலவுகளுக்கும் கையை பிசையும் நிலைக்கு ரயில்வே தள்ளப்பட்டு விட்டது. இதற்கு முன்பு, 2014-15 நிதியாண்டில் கட்டணத்தை உயர்த்தினர். அப்போது, 7வது சம்பள கமிஷனால் ஏற்படும் கூடுதல் செலவுகள், பயணிகள் வசதி,  உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவை கட்டண உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டது. தற்போது, வரவுக்கு மேல் செலவு உள்ளதால் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். நடப்பு நிதியாண்டில் இதுவரை இயக்க செலவு விகிதம் 123 சதவீதமாக உள்ளதை, நிதியாண்டு முடிவதற்குள் 95 சதவீதத்துக்கு கொண்டுவந்து விட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, பயணிகள் டிக்கெட் மூலம் கிடைக்க வேண்டிய வருவாயை, சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்தால் ரயில்வே இழந்து விட்டது. விடுமுறை நாட்கள், பண்டிகைகள் தவிர சில வழித்தடங்களில் பெட்டிகள் காலியாகத்தான் ஓடுகின்றன என ரயில்வே துறையினர் தெரிவிக்கின்றனர். வருவாய் குறைவதால் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்டினால்தான், இயக்க செலவு விகிதத்தை 95 சதவீதத்துக்கு குறைக்க முடியும். தற்போது கிலோ மீட்டருக்கு ஒரு காசு முதல் 4 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, புறநகர் ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் கட்டணங்கள் உயரவில்லை.

இது ஆறுதல் தருவதாக அமைந்தாலும், எந்த நோக்கத்துக்காக கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதோ அதை செயல்படுத்த வேண்டும். புதிய கட்டண உயர்வு மூலம் ரயில்வேக்கு ₹2,300 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருவாயை உயர்த்துவதை மட்டுமே பிரதானமாக கொள்ளக்கூடாது. இதை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்த வேண்டும். பல ரயில் நிலையங்களில் கழிப்பறை, லிப்ட் வசதிகள் கூட சரியாக இல்லை. இதுபோன்ற அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். நவீன வசதிகள் பல புகுத்தினாலும், சாமானிய பயணிகளுக்கு இதுதான் தேவை. ரயில்வே நிர்வாகம் அதையும் கவனிக்கலாமே!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்