SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனவு மெய்ப்படுமா?

2020-01-01@ 01:20:15

‘‘2020 ம் ஆண்டில் வளர்ந்த, வல்லரசு நாடாக நமது இந்தியா திகழவேண்டும்...’’ - இதுதான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தீராக்கனவு. வல்லரசு நாடாக வேண்டுமென்றால் கல்வி, சுகாதாரம், விவசாயம், பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் அசுர வளர்ச்சி காண வேண்டியது கட்டாயம். குடிமக்களுக்குள் ஒற்றுமை மிக முக்கியம். ஆனால், இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது? நிச்சயமாக, திருப்தி கொள்ளத்தக்க வகையில் இல்ைல. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, அரசுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் போக்கு உள்ளிட்ட பல்வேறு தவறான நடவடிக்கைகள், நமது நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்து அச்சம் கொள்ள வைக்கிறது. இந்தப் பிரச்னைகளை திசை திருப்புவதற்காக உருவாக்கப்படுகிற மேலும் பல புதிய சிக்கல்கள், தேசத்தின் ஒற்றுமையை கெடுத்து, அதன் குடிமக்களுக்கு இடையே வேற்றுமையை தூண்டுவதாக இருப்பது பேராபத்து. வல்லரசாக வேண்டுமென்றால், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது மகத்தான பன்மைத்துவ தத்துவம் போற்றப்பட வேண்டும். செய்வதற்கு இன்னும் சில காரியங்களும் இருக்கிறது.

அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு நமக்கு தேவை என்பதால், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க மாணவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நம் நாட்டில் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவில்லை என்பதால், காரணத்தை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது நோய்கள் தலைதூக்கி வருகிறது. இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே சுகாதாரத்துறையை மேம்படுத்த வேண்டியது கட்டாயம்.

1970ல் 55.52 கோடியாக இருந்த இந்திய மக்கள்தொகை, 2019ல் 136.64 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவாக, குடிநீர், சுத்தமான காற்று, வேலைவாய்ப்புகள், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது என பல விஷயங்களிலும் சிக்கல் தலைதூக்கியுள்ளது. இருக்கிற பிரச்னைகளையே தீர்க்க முடியாமல் திணறி வரும் வேளையில், மக்கள் தொகை மேலும் அதிகரித்தால் நிலைமை என்னவாகும்? பொருளாதார மந்தநிலையை சரி செய்யாவிட்டால் வரும் ஆண்டில் வேலையிழப்பு உள்ளிட்ட ஆபத்துகள் மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, நாட்டின் மிக முக்கிய பிரச்னையாக எடுத்துக் கொண்டு பொருளாதார மந்த நிலையை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான கல்வி, சீரான பொருளாதாரம், சுகாதாரம், விவசாயம், அறிவியலில் புதுமை, அனைவருக்கும் வேலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் 100 சதவீத இலக்கை அடைய இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மேற்கண்ட பிரச்னைகளை தீர்க்க புது வழிமுறைகள் ஏதேனும் உள்ளதா என்பதை அரசு ஆராய்ந்து நேர்கொண்ட பாதையில் பயணித்தால், கலாமின் கனவை நனவாக்க முடியும். அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியாவை பொருளாதார வல்லரசு நாடாக மாற்ற இந்த T20 புத்தாண்டில் சபதம் ஏற்போம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்