SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேம் பிரியர்களுக்கான போன்

2019-12-30@ 13:51:10

நன்றி குங்குமம் முத்தாரம்

பத்தொன்பது மாதங்களுக்கு முன்பு சீனாவின் தேசிய இளைஞர்கள் தினத்தன்று உதயமானது ‘ரியல்மி’ நிறுவனம். அதற்குள் பதினைந்து மாடலில் விதவிதமான ஸ்டைல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுவிட்டது ‘ரியல்மி’. இதுபோக உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்டியலில் இடம், 1.5 கோடி போன்கள் விற்பனை, வியட்நாம், பிரான்ஸ், ஸ்பெயின், ரஷ்யா உட்பட இருபது நாடுகளில் சந்தை, இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் 14.3 சதவீதத்தை தன்வசப்படுத்தியது என வளரும் நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் ‘ரியல்மி’ சமீபத்தில் ‘எக்ஸ்2’ என்ற புதுமாடலை களமிறக்கியுள்ளது.

முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது செல் ஃபி கேமரா, சார்ஜிங் சிஸ்டம், வண்ணத்தில் நல்ல மாறுதலை செய்திருக்கிறது. 6.4 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கேம் பிரியர் களுக்காக ஸ்நாப்டிராகன் 730ஜி சிப்செட், 4ஜிபி, 6ஜிபி, 8ஜிபி என மூன்று விதமான ரேம், 64ஜிபி, 128ஜிபி என இரண்டு வகையான ஸ்டோரேஜ், 32 எம்பியில் செல்ஃபி கேமரா, சாம்சங் சென்சாருடன் 64 எம்பியில் மெயின் கேமரா, 8 எம்பியில் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்பியில் மேக்ரோ கேமரா, இன்னொரு 2 எம்பியில் போட்ரியாட் கேமரா என நான்கு பின்புற கேமராக்கள், வேகமாக சார்ஜ் ஆக 4000 mAh திறன்கொண்ட பேட்டரி, எடை குறைவான மெலிதான வடிவமைப்பு என அசத்துகிறது இந்த போன். விலை ரூ.16,999-லிருந்து ஆரம்பிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்