SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனநாயகம் தழைக்குமா?

2019-12-30@ 00:10:48

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று இரண்டாம் கட்டமாக நடக்கிறது. புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடத்தப்படுகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை இன்று நடக்கும் 2ம் கட்ட தேர்வில் வாக்காளர்கள் தேர்வு செய்கின்றனர். இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலாவது வன்முறையின்றி அமைதியாக நடக்குமா என்ற கேள்விக்குறி வாக்காளர்கள் மத்தியில் எழாமல் இல்லை. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் என்பது எப்போதுமே மோதல் களமாக காட்சியளிக்கும். ஒரே ஊருக்குள் கூடி குழாவிய இருவர், தேர்தல் களத்தில் எதிரெதிர் திசையில் பயணிக்கும்போது இயல்பாகவே மோதல் வருவதுண்டு. சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களோடு உள்ளாட்சி தேர்தல்களை ஒப்பிடமுடியாது. உள்ளாட்சி தேர்தலின் பகையுணர்ச்சியானது, காலம் கடந்து கூட கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு வழிவகுத்திடும்.

அந்த வகையில் கடந்த 27ம் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்தேறின. சில இடங்களில் ஆளும்கட்சியினர் அத்துமீறி நடந்ததோடு, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஓட்டுப்பெட்டிகளை கூட கைப்பற்றினர். திருவள்ளுவர் மாவட்டத்தில் வாக்களித்த சீட்டுகளையே, வாக்காளர்களுக்கு வழங்கி பரபரப்பு ஏற்படுத்தினர். மதுரையில் இரு தரப்பினரிடையே மோதல், கடம்பத்தூர் ஒன்றியத்தில் வாக்குச்சாவடி மையங்கள் சூறை, தேனி மாவட்டத்தில் திமுக நிர்வாகி மீது தாக்குதல், தூத்துக்குடி மாவட்டத்தில் பூத் அலுவலர்களிடம் தகராறு என பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. சில இடங்களில் ஆளும்கட்சியினரின் அத்துமீறல்களை கண்டித்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடந்தன.உண்மையில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் ஆளும்கட்சியினர் தனது ஆதரவாளர்களை பதவியில் அமர்த்தும் நடவடிக்கையாகவே தென்படுகிறது. கிராமப்பகுதிகளில் பணத்தை தண்ணீராக இறைத்து, ஆளும்கட்சியினர் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட என்ன முயற்சிகள் எல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து முடித்தனர். தேர்தல் நாளன்று வெளிமாவட்டத்தினர் வெளியேற வேண்டும் என்ற விதியை கூட பின்பற்றுவது கிடையாது.

இத்தகைய சூழலில் இன்று நடக்கும் 2ம் கட்ட தேர்தலாவது வன்முறைகள், ஆளும்கட்சியினரின் அராஜகம் இன்றி முறையாக நடக்குமா என்ற கேள்வி வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, சமூக விரோதிகளை கண்காணிக்க சிசிடிவி காமிரா பதிவுகள் உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்பட வேண்டும். மாவட்ட, ஒன்றிய அளவிலான பதவிகளை எப்படியாவது பிடித்து விட துடிக்கும் தந்திர வேலைகளை கண்காணித்து அதை முறியடிக்க தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும். நியாயமான வாக்குப்பதிவே ஜனநாயகம் தழைப்பதற்கான வழிமுறையாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • varaverppu stage20

  உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

 • america athipar2020

  காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

 • trumb12020

  இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

 • school20

  ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

 • jaya20

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்