SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்தியமான எச்சரிக்கை

2019-12-28@ 01:29:36

ஜனநாயக மாண்புகளை அடித்தளஜ னநாயக மாண்புகளை அடித்தளமாகக் கொண்டு இயங்கி வரும் உலக நாடுகளின் பட்டியலில், நமது தேசத்துக்கு தனிப்பெருமை உண்டு. சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளைக் கடந்து விட்டபோதும், மாறிவரும் அரசியல் - சமூக - பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப, தன்னை தகவமைத்துக் கொண்ட போதும், இன்னும் அடிநாதமாக இருந்து நம்மை இயக்குவது, ஜனநாயகக் கூறுகளே. மத்திய அரசின், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் முன்னெடுத்து வரும் இந்தப் போராட்டங்களுக்கு பொதுமக்கள், முக்கிய எதிர்க்கட்சிகளின் தார்மீக ஆதரவு, கூடுதல் பலம் சேர்க்கிறது. மாணவர்கள் போராட்டத்துக்கு அரசியல் தளத்தில் இருந்து சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அவை இயல்பே. ஆகவே, அவை பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஆனால், அதிகாரத்தளத்தில் இருந்து கிளம்பிய ஒரு எதிர்ப்புக் குரல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

‘‘ஒரு தலைவன், சரியான பாதையில் மக்களை வழிநடத்துபவனாக இருக்கவேண்டும். ஒருபோதும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடாது. தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு சிலர் தலைமையேற்று வன்முறை மற்றும் கலவரப் பாதைகளை நோக்கி வழிநடத்திச் செல்கிறார்கள்...’’ என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார், இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத். மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்பதே, ஜனநாயகம் என்கிற சொல்லுக்கான உள்ளார்ந்த அர்த்தம். கருத்துரிமை கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில், உரிமைகளை கோரிப் பெறுவதற்கான, எதிர் கருத்துகளை, எதிர்ப்புகளை பதிவு செய்வதற்கான ஆயுதமே போராட்டம். அந்த தன்னெழுச்சிப் போராட்டங்களை, ராணுவத்தின் தலைமை தளபதி ஒருவர் விமர்சனம் செய்வது, சுதந்திரமடைந்த 72 ஆண்டுகளில் நாடு இதுவரை கண்டிராத சம்பவம். ராணுவ தலைமை தளபதியின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள், கண்டனங்கள் கிளம்பியிருக்கின்றன. சீருடைப் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு என்று சில கட்டுப்பாடுகளை, மரபுகளை நமது அரசு வகுத்து வைத்திருக்கிறது. அதுவும் முக்கியமாக, ராணுவ உயர் பொறுப்புகளில் இருக்கிறவர்கள், அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகி இருப்பதே இதுவரையிலான மரபு. குடியுரிமை சட்டத் திருத்தம், அதன் விளைவான போராட்டங்கள் குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்திருப்பது மரபு மீறிய செயல் மட்டுமல்ல; படு ஆபத்தான போக்கும் கூட. காரணம், ராணுவத்தை நமது அரசு, அரசியல் தளத்தில் இருந்து வெகுதூரத்துக்கு விலக்கியே வைத்திருக்கிறது. அப்படிச் செய்யத் தவறியதற்கான பலனைத் தான், பக்கத்து தேசம் பாகிஸ்தான் இன்றளவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

‘‘இன்று, ராணுவத் தளபதியை அரசியல் பேச அனுமதித்தால், நாளை... ராணுவம் அரசையே வழிநடத்தும் நிலைமை வரலாம்...’’ என்று எச்சரித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் கலப்பா. சத்தியமான எச்சரிக்கை.
மாகக் கொண்டு இயங்கி வரும் உலக நாடுகளின் பட்டியலில், நமது தேசத்துக்கு தனிப்பெருமை உண்டு. சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளைக் கடந்து விட்டபோதும், மாறிவரும் அரசியல் - சமூக - பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப, தன்னை தகவமைத்துக் கொண்ட போதும், இன்னும் அடிநாதமாக இருந்து நம்மை இயக்குவது, ஜனநாயகக் கூறுகளே. மத்திய அரசின், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் முன்னெடுத்து வரும் இந்தப் போராட்டங்களுக்கு பொதுமக்கள், முக்கிய எதிர்க்கட்சிகளின் தார்மீக ஆதரவு, கூடுதல் பலம் சேர்க்கிறது. மாணவர்கள் போராட்டத்துக்கு அரசியல் தளத்தில் இருந்து சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அவை இயல்பே. ஆகவே, அவை பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஆனால், அதிகாரத்தளத்தில் இருந்து கிளம்பிய ஒரு எதிர்ப்புக் குரல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
‘‘ஒரு தலைவன், சரியான பாதையில் மக்களை வழிநடத்துபவனாக இருக்கவேண்டும். ஒருபோதும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடாது. தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு சிலர் தலைமையேற்று வன்முறை மற்றும் கலவரப் பாதைகளை நோக்கி வழிநடத்திச் செல்கிறார்கள்...’’ என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார், இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத்.

மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்பதே, ஜனநாயகம் என்கிற சொல்லுக்கான உள்ளார்ந்த அர்த்தம். கருத்துரிமை கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில், உரிமைகளை கோரிப் பெறுவதற்கான, எதிர் கருத்துகளை, எதிர்ப்புகளை பதிவு செய்வதற்கான ஆயுதமே போராட்டம். அந்த தன்னெழுச்சிப் போராட்டங்களை, ராணுவத்தின் தலைமை தளபதி ஒருவர் விமர்சனம் செய்வது, சுதந்திரமடைந்த 72 ஆண்டுகளில் நாடு இதுவரை கண்டிராத சம்பவம். ராணுவ தலைமை தளபதியின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள், கண்டனங்கள் கிளம்பியிருக்கின்றன. சீருடைப் பணியாளர்கள், அதிகாரிகளுக்கு என்று சில கட்டுப்பாடுகளை, மரபுகளை நமது அரசு வகுத்து வைத்திருக்கிறது. அதுவும் முக்கியமாக, ராணுவ உயர் பொறுப்புகளில் இருக்கிறவர்கள், அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகி இருப்பதே இதுவரையிலான மரபு. குடியுரிமை சட்டத் திருத்தம், அதன் விளைவான போராட்டங்கள் குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்திருப்பது மரபு மீறிய செயல் மட்டுமல்ல; படு ஆபத்தான போக்கும் கூட. காரணம், ராணுவத்தை நமது அரசு, அரசியல் தளத்தில் இருந்து வெகுதூரத்துக்கு விலக்கியே வைத்திருக்கிறது. அப்படிச் செய்யத் தவறியதற்கான பலனைத் தான், பக்கத்து தேசம் பாகிஸ்தான் இன்றளவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ‘‘இன்று, ராணுவத் தளபதியை அரசியல் பேச அனுமதித்தால், நாளை... ராணுவம் அரசையே வழிநடத்தும் நிலைமை வரலாம்...’’ என்று எச்சரித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் கலப்பா. சத்தியமான எச்சரிக்கை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்