SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடக்கம் அமரருள் உய்க்கும்

2019-12-27@ 00:07:48

அடக்கமாக ஒருவர் வாழ்வாராயின், அது அவரை விண்ணுலகத்துக்குள் செலுத்தும். அப்படி இல்லாதவர்கள் கொடிய நரகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும் என்று இருவரியில் கூறிவிட்டு சென்றுள்ளார் திருவள்ளுவர். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, சில பாஜ தலைவர்களுக்கு பொருந்தும். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றுவதுபோல், சில பாஜ தலைவர்கள் பேசி வருகின்றனர். சமீபத்தில் ஒருவர், மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று பேசினார். இப்போது அரியானா எம்எல்ஏ ராம் குஜ்ஜார், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரானவர்களை ஒரு மணி நேரத்தில் துடைத்து எறிந்துவிடுவோம் என்று கூறுகிறார். கேரளாவில் பாஜ இளைஞரணி தலைவர் ஒருவர், போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்கள், நடிகைகள் வீட்டில் ரெய்டு நடக்கும் என்று மிரட்டல் விடுக்கிறார்.

ஆட்சியும், அதிகாரமும் இன்று வரும், நாளை போகும். ஆனால், மக்கள் நிரந்தரமானவர்கள். அடுத்த முறை  வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வர வேண்டும் என்றால், மக்களின் தயவு தேவை. ஆனால், இதை சிறிதும் சிந்தித்து பார்க்காமல், தான் தோன்றித்தனமாக பேசுவது என்பது, கட்சிக்குத்தான் அவப்பெயரை ஏற்படுத்தும். பாஜ தலைமையே இதுபோன்ற விஷயங்களில் அமைதி காத்து வரும் நிலையில், கீழ் நிலை தலைவர்கள் இதுபோன்ற வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவது, கட்சித் தலைமையின் அனுமதியுடன் அவர்கள் பேசுகிறார்களோ என்ற தோற்றத்தை உருவாக்கிவிடும் என்பதை இவர்கள் மறந்துவிடக்கூடாது.

குடியுரிமை திருத்தச் சட்டம் தவறு என்று அவர்கள் போராடுகிறார்கள். அது தவறு என்று நீங்கள் நினைத்தால், அதற்கான சரியான விளக்கத்தை, தெளிவான கண்ணோட்டத்துடனும், தர்க்க ரீதியாகவும் விளக்குங்கள். அதுதான் உங்களை சாமர்த்தியசாலியாகவும், திறமையானவர்களாகவும் வெளிப்படுத்தும். அதை விடுத்து மிரட்டல்கள், ஒடுக்குதல்கள், அடக்குமுறைகள், எளியாரை அடக்கும் வலியார்களாகத்தான் காட்டும். பாஜ.வின் கீழ்நிலை தலைவர்களை அதன் தலைமை விளக்கச் சொல்லப் போகிறதா அல்லது உளறச் சொல்லப் போகிறதா என்பது அதன் நடவடிக்கையில்தான் அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால் கிரகணத்தின் பலம் இருக்கும் வரையில்தான், உலக்கை நிற்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • varaverppu stage20

  உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

 • america athipar2020

  காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

 • trumb12020

  இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

 • school20

  ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

 • jaya20

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்