SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனது முதலாவது 5G ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Realme

2019-12-26@ 14:38:49

Realme ஆனது சீன ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான Oppo நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனமானது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தனது முதலாவது 5G ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 7 ஆம் திகதி Realme X50 5G எனும் குறித்த கைப்பேசியினை சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த தகவலானது சீனாவின் மைக்ரோ ப்ளாக் இணையத்தளமான Weibo வில் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு வகையான பிரதான நினைவகங்களுடன் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது. அவற்றில் ஒன்று 8GB RAM உடையதாகவும், மற்றையது 12GB RAM உடையதாகவும் காணப்படுகின்றது. இவற்றின் விலைகள் முறையே 27,999 இந்திய ரூபாய்கள் ஆகவும், 34,999 இந்திய ரூபாய்கள் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்