SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விலகாத அச்சம்

2019-12-26@ 01:35:59

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் எழுந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பல மாநிலங்களில் வன்முறை தலைதூக்கியது. இந்த பதற்றமான நிலை முழுவதுமாக அடங்காத நிலையில், நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. அதற்காக மத்திய அரசு ₹13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) பணியை தொடங்கவே நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதற்கான அடித்தளப் பணியாக தேசிய மக்கள் தொகை பதிவு இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களை தொற்றிக் கொண்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது அதனுடன் சேர்த்து மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பு பணியை மேற்கொள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கும் என்ஆர்சி.க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.  ஆனால், நாடாளுமன்றத்தில் சொன்னதற்கும், பிரதமர் சொன்னதற்கும், அமித்ஷாசொன்னதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. அரசு இதில் உண்மையை மறைக்கிறதோ என்ற சந்தேகம் தான் பலரிடம் உள்ளது.

 பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள் அடிப்படையில்தான் பதிவு செய்யப்படும். மக்கள் தொகை பதிவு என்பது நாட்டின் வழக்கமாக குடியிருப்பவர்கள் பட்டியல் தான் என்று கூறியுள்ளது. இருந்தாலும் இந்த விஷயத்தில் இன்னும் தெளிவான தகவல்கள் இல்லை.
கடந்த 2010ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, மக்கள் தொகை பதிவேட்டுக்கான தகவல்களும் சேகரித்து பதிவு செய்யப்பட்டன. அதன் பின்னர் 2015ல் வீடு வீடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. இந்த பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் பணியும் முடிந்துள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளுக்கும், நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கும் வித்தியாசம் இருப்பது மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பது எதார்த்தம். இது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது. இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அப்போதுதான் நாட்டில் நிலவும் பதற்றம் தணியும் என்பதில் சந்தேகம் இல்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்