SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சறுக்கல் தொடர்கிறது

2019-12-25@ 00:22:49

இந்தியாவில்,  கடந்த 2014-ம் ஆண்டில், வெறும் 7 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.  ஆட்சி நடைபெற்று வந்தது. அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 21  மாநிலங்களை பா.ஜ. கைப்பற்றியது. நாடு முழுவதும் வீசிய மோடி அலையே இதற்கு காரணமாக  கூறப்பட்டது.
2017-ம் ஆண்டில் பா.ஜ. ஆட்சி செய்யாத  மாநிலங்கள் எவை? என பட்டியலிடும் அளவுக்கு அக்கட்சி முன்னேறியது. தமிழகம், கர்நாடகா, கேரளா, மிசோரம், பஞ்சாப், ஒடிசா, மேற்குவங்காளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.  மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில்  இல்லாமல்  இருந்தது.ஆனால் 2018-ம் ஆண்டில் பா.ஜ.விடம் இருந்து பல மாநிலங்கள் கைநழுவிப்போயின. தெலங்கானா, ராஜஸ்தான்,  மத்திய  பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய ஐந்து மாநில தேர்தலில்,  பா.ஜ.வின்  செல்வாக்கு தவிடு பொடியானது.  பா.ஜ.வின் கோட்டையாக இருந்த மத்திய  பிரதேசம்,  ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.  மிசோரம்,  தெலங்கானா போன்ற மாநிலங்கள் அந்தந்த மாநில கட்சிகளிடம் சென்றுவிட்டது.

ஆந்திராவில்,  கூட்டணி  கட்சியான தெலுங்கு தேசம், சிறப்பு அந்தஸ்து வழங்காததால்  பா.ஜ.வைவிட்டு  வெளியேறியது.  ஜம்மு-காஷ்மீரில் நடந்து வந்த  மாநில கட்சியின் ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு  வரப்பட்டது. மஹாராஷ்டிராவில் பா.ஜ.வுக்கு சிவசேனா சரியான பதிலடி கொடுத்தது. அங்கு, சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தது.  கர்நாடகாவில், பா.ஜ ஆட்சிக்கு வந்தாலும்,  அங்கு  நிலையற்ற தன்மையே நிலவுகிறது. 2019-ம் ஆண்டும் பா.ஜ.வுக்கு ராசியான ஆண்டாக  அமையவில்லை. மஹாராஷ்டிராவை இழந்த பா.ஜ.,சமீபத்தில் நடந்து முடிந்த ஜார்கண்ட் தேர்தலை அதிகம் எதிர்பார்த்தது. ஆனால் அங்கும் பா.ஜ.வுக்கு பலத்த அடி கிடைத்தது. அங்கு  ஆட்சியையே பா.ஜ. பறிகொடுத்தது. காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. 2017-ம் ஆண்டு வரை இந்தியாவில் 21 மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ. கடந்த 2 ஆண்டில் மட்டும் 5 மாநிலங்களை இழந்துள்ளது.

தற்போது பா.ஜ. ஆளும்  மாநிலங்களின் எண்ணிக்கை 16 ஆக குறைந்துவிட்டது. நாட்டின் 71  சதவீத பகுதியை ஆட்சி செய்த பா.ஜ. இப்போது 40 சதவீத பகுதிகளில் மட்டுமே ஆட்சி செய்யும் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. மக்கள் விரும்பாத ஒரு செயலை, ஆட்சியாளர்கள் மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும்போது, அது நிச்சயம் ஒரு நாள் வெடிக்கும் என்பதற்கு ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவே சாட்சி. மக்கள் மனநிலையை புரிந்து,  போராட்ட உணர்வுக்கு மதிப்பளித்து, ஆட்சியாளர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் அரசுக்கு மக்கள் ஆதரவு நீடிக்கும். இல்லையேல், சக்கரம் மிக விரைவாக சுழன்று அடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்