2 கிலோ தங்கம் வழிப்பறி 10 பேர் கும்பல் சிக்கியது 161 பவுன் நகை பறிமுதல

Date: 2013-07-11@ 00:57:10

புதுக்கோட்டை : மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்கு தெருவில் எஸ்.என்.ஆர் ஜூவல்லரி என்ற நகைக்கடை உள்ளது.  சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக 2.5 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை காரில் எடுத்துக் கொண்டு, நகைக்கடை ஊழியர்கள் மணிகண்டன் (31), முத்துராஜன்(30) ஆகியோர் கடந்த மே 29ம் தேதி  புறப்பட்டனர். காரை டிரைவர் முருகேசன்(38) என்பவர் ஓட்டினார்.
பல்வேறு இடங்களில் அரை கிலோ தங்க ஆபரணங்களை வினியோகித்து விட்டு, 2 கிலோ தங்கத்துடன் புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வந்தபோது ஒரு கும்பல் போலீஸ் போல் நடித்து 2 கிலோ தங்க நகை மற்றும் ரூ.7 லட்சம் பணத்துடன் மர்ம கும்பல் தப்பியது.

இது குறித்த புகாரின்பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை குபலை தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளையில் தொடர்புடைய அறந்தாங்கியை அடுத்த ஒண்டியன்குடியிருப்பை சேர்ந்த சரவணன் (25), சர்க்கரை குடியிருப்பு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையில் மதுரையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (59), முரளிகிருஷ்ணன் (39), மாரிக்கண்ணு (46), திருவாரூரை சேர்ந்த பன்னீர்செல்வம் (46), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த செல்வக்குமார் (24), தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த வரதன் என்கிற வரதராஜன் (38), சென்னை பட்டிணப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார் (28), கோயம்புத்தூர் மேட்டுப் பாளையத்தை சேர்ந்த பாலன் (65) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மதுரை, திருவாரூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்த தனிப்படையினர் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 161 பவுன் நகை (ஒன்றேகால் கிலோ) மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons

Like Us on Facebook Dinkaran Daily News