SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனவரி முதல் நிஸான் கார்களின் விலை உயர்கிறது

2019-12-22@ 00:24:29

ஜப்பானிய கார் நிறுவனமான நிஸான் இந்திய மார்க்கெட்டில், மூலப்பொருட்களின் விலை உயர்வு, கூடுதல் உற்பத்தி செலவீனம் உள்ளிட்ட காரணங்களால் கார் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. வரும் 2020 ஜனவரி முதல் தனது  கார்களின் விலையை 5 சதவீதம் உயர்த்த இருப்பதாக நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விலை மாடலுக்கு தக்கவாறு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிஸான் இந்தியா தலைவர் ராகேஷ் வத்சவா கூறுகையில், “இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்புமிக்க தயாரிப்புகளை வழங்கி வருகிறோம். தற்போதைய சவாலான சந்தை சூழலில், உற்பத்தி செலவீனத்தை  மனதில்வைத்து அனைத்து கார்களின் விலையையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 2020 ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும்” என்றார்.

இதனிடையே, தற்போது நிஸான் ரெட் வீக்கெண்ட்ஸ் என்ற பெயரில் கார்களுக்கான சிறப்பு தள்ளுபடி சலுகையை நிஸான் வழங்கி வருகிறது. இதன்படி, நிஸான் கிக்ஸ் எஸ்யூவி ரக காருக்கு ரூ.40,000 வரை தள்ளுபடியும், ரூ.40,000 வரை  எக்ஸ்சேஞ்ச் போனஸ் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவன வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.10,000 தள்ளுபடி பெற முடியும். இதேபோன்று, டட்சன் ரெடிகோ காருக்கு ரூ.65,000 வரையிலான தள்ளுபடியும், ரெட் வீக்கெண்ட்ஸ்  திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.1 கோடி மதிப்புடைய சிறப்பு பரிசுகளையும் வாடிக்கையாளர்களுக்கு நிஸான் மற்றும் டட்சன் நிறுவனங்கள் வழங்க உள்ளன. டட்சன் பிராண்டில் ரெடிகோ கார் ரூ.2.79 லட்சத்தில் இருந்தும்,  நிஸான் மைக்ரா ஆக்டிவ் கார் ரூ.5.29 லட்சத்தில் இருந்தும் கிடைக்கின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்