SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் களமிறங்கும் சீனா கார்கள்

2019-12-22@ 00:23:56

சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் தனது கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்திய கார் சந்தையில் கால் பதித்தது. அடுத்து, கிரேட்வால் நிறுவனமும் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க ஆயத்தமாகி வருகிறது.  தற்போது செடான், எஸ்யூவி, எம்பிவி ரகம் மற்றும் மின்சார கார்களை எப்ஏடபிள்யூ நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்நிலையில், தனது ஹெய்மா 8எஸ் என்ற மிட்சைஸ் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் முதலாவது மாடலாக அறிமுகம்  செய்ய உள்ளது. இப்புதிய கார், மிட்சைஸ் எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்படும். இதில், 193 எச்பி பவரையும், 293 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு  இருக்கிறது.

இதனுடன், 7எக்ஸ் என்ற தனது எம்பிவி கார் மாடலையும் இந்தியாவில் களமிறக்கும் திட்டத்தை வைத்துள்ளது. அண்மையில் சீனாவில் நடந்த குவாங்ஸோ ஆட்டோ எக்ஸ்போவில்தான் 7எக்ஸ் எம்பிவி ரக கார் அறிமுகம்  செய்யப்பட்டது. ஹெய்மா 8எஸ் என்ற எஸ்யூவி ரக காரில் இருக்கும் அதே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்தான் இதிலும் இடம்பெற்றுள்ளன. இந்த 7எக்ஸ் எம்பிவி ரக கார், 7 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. மேலும், இந்தியாவின் தன்னிகரற்ற எம்பிவி ரக மாடலாக வலம் வரும், டொயடோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா காரைவிட அளவில் பெரியதாக இருக்கிறது. இந்த கார்கள்,  அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. விலை விவரம் வெளியிடப்படவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்